ஆரோக்கியம் குறிப்புகள்

எக்ஸாம் வந்தாலே மண்டை குடையுதா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

தேர்வுகள் வந்துவிட்டால் குழந்தைகள் டென்சனாகிவிடுகின்றனர். பிள்ளைகளைவிட அவர்களின் பெற்றோர்களுக்குப் பரபரப்பு பற்றிக் கொள்ளும். அவர்களுடைய அலுவலக நணடபர்கள், உறவினர்கள் என எல்லோரும் குழந்தை எப்படி தேர்வுக்குத் தயாராகிறான் என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

exam stress
இந்த எல்லா கேள்விகளும் சுற்றி வளைத்து, குழந்தைகளுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்துவிடுகிறது. உங்கள் குழந்தைகளின் தோ்வுக்கால மன அழுத்தத்தைப் போக்கி அவர்களை ஹேப்பியாக தேர்வு எழுதவைக்க என்ன செய்யலாம் என யோசிக்கலாம் வாங்க !

காரணங்கள்

தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

• சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமை

• போதுமான அளவு உறக்கமின்மை

• தோ்வைக்கண்டு பயம்

• தன்னம்பிக்கை இன்மை

• தலைவலி அல்லது தோல் அரிப்பு போன்ற உடல்சார்ந்த பாதிப்புகள்

இப்படி எதாவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்தாலே உங்கள் பிள்ளைகளின் மனஅழுத்தத்தை எளிமையாக போக்க முயற்சி செய்ய முடியும்.

ஆரோக்கியமான சரிவிகித உணவு

தேர்வு நேரத்தில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவினைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அதிகமான கொழுப்பு, அதிகமான இனிப்பு கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காபி, டீ, குளிர் பானம் போன்றவற்றை அதிகமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. காய்கறி, பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். நார்ச்சத்து மிகுந்துள்ள காய்கறிகளும், பழங்களும் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் மிகவும் ஏற்றது. தேர்வு நேரங்களில் இவற்றை அதிகமாகக் கொடுக்க வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தண்ணீர்

எல்லாவற்றுக்கும் மேலாக அதிகமான அளவு தண்ணீா் பருகவேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும். தேவையான அளவு குடிநீா் பருகத் தவறினால் அது உடல்சார்ந்தும் உள்ளம் சார்ந்தும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உறக்கம்

தேர்வு நேரத்தில் இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிப்பது நல்லதல்ல. இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிப்பதனால் உடல்சோர்வு ஏற்படுகிறது. தேர்வு எழுதும் பொழுது படித்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். நன்றாக உறங்கி சுறுசுறுப்பாக இருந்தால் தோ்வினைச் சிறப்பாக எழுத முடியும். தூக்கத்தைத் தவிர்த்து இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிப்பதுதான் குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு மிக முக்கியக் காரணமாகும். தேர்வு நேரங்களில் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு உறக்கம் மற்றும் ஓய்வு கிடைப்பதைப் பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும்.

நேரம் ஒதுக்குதல்
குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். பெற்றோர்கள், தேர்வு நேரங்களில் தங்களுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். நமக்குத் தெரிந்தால் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தெரியாவிட்டால் அவர்கள் அருகில் அமர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். பெற்றோர்களின் நெருக்கம் குழந்தைகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

தன்னம்பிக்கை

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்கின்ற தன்னம்பிக்கையை தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். தோ்வில் என்ன எழுதுகிறோம் என்பதைவிட, தேர்வை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். தேர்வைத் தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ளக் கூடிய மனநிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.

பொழுதுபோக்கு
மன அழுத்தத்தைப் போக்கும் பொழுது போக்கு மிக அவசியம். படிப்பிற்கிடையிலான ஓய்வு நேரத்தில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், பிடித்தமான பாடல்களைக் கேட்டு மகிழ்தல் போன்ற வகையிலான பொழுது போக்குகள் அவர்களுடைய பரபரப்பான மனநிலையைப் போக்கி அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

தவிர்க்க வேண்டியவை

குழந்தைகளின் தேர்வுக் காலத்தில், அதிகமான உறவினர்கள் அல்லது நணபா்களை வீட்டில் சேர்த்து வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அது குழந்தைகளின் மன ஒருமையைச் சிதைத்து, அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

பிள்ளைகள் சிறப்பாகத் தேர்வினை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றோர்கள் செய்ய வேண்டும். தேர்வு நாளன்று, அவர்கள் பள்ளிக்குச் சரியான நேரத்திற்குப் புறப்பட்டுப் போவதற்கான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய வேண்டும்.

சரியான புரிதல்

ஒரு நெருக்கடியை எப்படி சமாளிக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் தேர்வு வைக்கப்படுகிறது. எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறோம் என்பதை அறிவதற்காக அல்ல. மதிப்பெண்களைப் பொறுத்தோ, வெற்றி தோல்வியைப் பொறுத்தோ ஒரு தேர்வின் முடிவு தீா்மானிக்கப்படுவது இல்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக இடைவெளியில்லை. இடையில் ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. தோ்வு என்பது பதற்றப்படாமல் படித்ததை நினைவுக்குக் கொண்டு வருகின்ற கலை. மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் இருந்தால் நாம் படித்தவைகள் தேவையான நேரத்தில் நினைவுக்கு வரும். வெற்றியும் தோல்வியும் அதனை அணுகுகின்ற பார்வையில்தான் உள்ளது. மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படாமல், மகிழ்ச்சியான மனநிலையோடு தோ்வினை எதிர்கொள்கின்ற மனப் பக்குவத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் இமயத்தை நோக்கி எட்டு வைக்கத் தொடங்கிவிடுவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button