மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு ஏற்படும் ஒமிக்ரான் தொற்று:அறிகுறிகள் என்னென்ன?

கொரோனா வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களிடம் காணப்படும் அறிகுறிகள் குறித்து பிரபல மருத்துவமனையின் குழந்தைகளுக்கான நுரையீரல் நிபுணர் மருத்தவர் தீரன் குப்தா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஒமைக்ரான் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் ஒமைக்ரானால் 4,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மற்றும் ஒமைக்ரானா வைரஸ் குழந்தைகளுக்கு பெரும்பாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று கூறப்பட்டு வந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆனால், குழந்தைகளுக்கும், பதின்வயதினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அதை ஆர்பிசிஆர் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்றாலும், அதற்கான பொதுவான அறிகுறிகள் என்ன என்பதை குழந்தைகளுக்கான நுரையீரல் நிபுணர் சில தகவல்களை கூறியுள்ளார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதில் “குழந்தைகள், 11 வயது முதல் 17 வயதினர் கொரோனாவில் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பொதுவாக அதிக காய்ச்சல், உடல்நடுக்கம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால், குழந்தைகளோடு ஒப்பிடுகையில் பதின்வயதினருக்கு டெல்டா வைரஸ் அறிகுறிகளும் ஒரேமாதிரியாக இல்லாமல் தீவிரம் குறைந்தே இருந்தது. 11 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு அதிகமான அறிகுறிகள் இருக்கும், தீவிரத்தன்மை டெல்டா வைரஸ் போல் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வைரஸைப் பொறுத்தவரை மனிதர்களின் மேல்புற சுவாசப் பகுதி (upper respiratory) பகுதியைத்தான் பாதிக்கிறது. இதனால், தொற்றின் அறிகுறிகள் ஜலதோஷம், தலைவலி, மூக்கில் நீர்வடிதல், காய்ச்சல், உடல்நடுக்கம் ஆகியவை இருக்கும். 2-வது அலையில் இருப்பதற்கு மாறாகவே ஒமைக்ரான் இருக்கிறது.

ஒமைக்ரானில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே நாவில் சுவை உணர்வு இல்லாமல் இருத்தல், மணம் இழத்தல் போன்றவை இல்லை. 10 நோயாளிகளில் 3 பேருக்கு மட்டுமே இந்த அறிகுறி இருக்கிறது, டெல்டா மீது ஒமைக்ரானின் அதிகமான தாக்கத்தால் டெல்டாவின் அறிகுறிகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உடல் ஆரோக்கியமாக இருப்போர், தடுப்பூசி செலுத்தியோர் ஆகியோரிடம் ஒமைக்ரான் அறிகுறிகள் லேசாகவே இருக்கின்றன. ஆனால், தடுப்பூசி செலுத்தாதவர்கள், இணைநோய்கள் இருப்போரிடம் வீரியம் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர் விளக்கம் அளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button