மருத்துவ குறிப்பு

மூளைப் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

புற்றுநோய் கட்டி என்பது எடுத்த எடுப்புலேயே புற்றுநோயாக உருவாவது கிடையாது. உங்களது உடல் பாகத்தில் ஓர் சிறு கட்டியாக முதலில் தோன்றி எந்த தொந்தரவும் கொடுத்திராது அமைதியாக சிறு பிள்ளையை போல தங்கி இருக்கும்.

 

ஐந்தாறு ஆண்டுகள் கழித்தே கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து புற்றுநோய் கட்டியாக மாறுகிறது. வெறும் கட்டியாக முதல் நிலையில் இருக்கும் போதே கண்டறிந்துவிட்டால், எளிதாக அதை அகற்றி பூரண குணமடைய வைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

ஆனால், இதன் முதன்மை நிலையில் அவ்வளவாக எந்த அறிகுறியும் தென்படாது. முக்கியமாக மூளைப் புற்றுநோய் இப்போது பரவலாக மக்களிடம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இனி, மூளைப் புற்றுநோயைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவைப் பற்றி காணலாம்…

இரண்டாம் வகை மூளைப் புற்றுநோய்

மூளையில் நேரடியாக ஏற்படும் புற்றுநோயை விட, உடலின் வேறு எதாவது பாகத்தில் தோன்றி மூளையை சென்று அடையும் புற்றுநோய் தான் அதிகமாக ஏற்படுவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது, இரண்டாம் வகை மூளைப் புற்றுநோய் என்று கூறப்படுகிறது.

தாக்குபிடிக்கும் காலம்

மூளைப் புற்றுநோய் தாக்கத்தை கண்டறிந்துவிட்டால், ஏறத்தாழ ஒரு வருடம் வாழ்வதே கடினம். அதுவும், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சை (surgery, chemotherapy, radiotherapy) போன்றவற்றை மேற்கொண்டால். நேரடி மூளை புற்றுநோய் ஏற்பட்டால் ஆறு மாதங்கள் தாக்குபிடிப்பதே சிரமம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அறிகுறிகள்

மூளைப் புற்றுநோயின் அறிகுறிகளாக கூறப்படுவது, தொடர்ச்சியான தலைவலி, மைய நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் நோய் தாக்குதல்கள். இதுப்போக, கை கால் வலி அதிகமாகும், நடக்க இயலாது.

சிகிச்சை

புற்றுநோய் கட்டியின் நிலை மற்றும் தாக்கத்தை பொறுத்தே சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சை (surgery, chemotherapy, radiotherapy) போன்றவை புற்றுநோயை அகற்ற மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் ஆகும்.

கட்டியின் வளர்ச்சி

மூளை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது சிறுவயது உடையவர்களுக்கு கூட ஏற்படலாம். பெரும்பாலும் வெறும் கட்டியாக இருக்கும். புற்றுநோய் கட்டியாக மாறுவதற்கு 5-10 வருடங்கள் வரை ஆகலாம்.

முதன்மை காரணம்

கதிர்வீச்சு வெளிப்படும் இடங்களில் அதிகமாக இருப்பவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

மூளைக் கட்டிகளின் வகைகள்

மூளையில் பல வகையான கட்டிகள் ஏற்படலாம். அனைத்து கட்டிகளும் ஒரே மாதிரி இருக்காது. மற்றும் அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகளாக மாறாது.

பரம்பரை

பரம்பரை உடற்கூறு கூட மூளை புற்றுநோய் ஏற்படுவதில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறப்படுகிறது.

அதிகாலை தலைவலி

அதிகாலையில் ஏற்படும் தலைவி, மூளை புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாக கூறப்படுகிறது. அடிக்கடி எந்த காரணமும் இன்றி அதிகாலை தலைவி ஏற்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

உடல்தானம்

முதல் வகை புற்றுநோய் என்றால் தாராளமாக உடலுறுப்பு தானம் செய்யலாம். ஆனால், இரண்டாம் வகை புற்றுநோய் என்றால் கண்டிப்பாக உடலுறுப்பு தானம் செய்யக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button