ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடை மற்றும் தாய்ப்பால் இரண்டிலும் ஏன் பெண்கள் கவனம் தர வேண்டும்?

பெண்கள் கர்ப்பகாலத்தில், குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தங்களை பற்றி கவலைப்படுவதே கிடையாது. உண்மையில் கர்ப்பகாலத்தை விட குழந்தை பிறந்த பின்னர் தான் தாய்க்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. தாய்ப்பாலை அதிகரிப்பது, சரியான உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

தாய்ப்பால் :

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். எனவே தாய் சத்தான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். தாய்ப்பால் சுரப்பிற்காக முன்பை விட கூடுதலாக 300 முதல் 500 கலோரிகள் அதிமாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டில் இது வேண்டாம்:

நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கண்டதையும் சாப்பிடக்கூடாது. உங்களுக்கு வீட்டில் உள்ள நெறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற தோன்றினால், அவற்றை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களை சுற்றி சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே இருக்கும் விதம் பார்த்துக்கொள்ளுங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தாய்ப்பால் கொடுத்தல்:

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை உடல் எடை தான். இதற்கு சிறந்த தீர்வு என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பது தான். தாய்ப்பால் கொடுப்பதனால், உடலில் உள்ள கலோரிகள் குறைக்கப்பட்டு உங்களது உடல் எடை நாளடைவில் கட்டுக்குள் வந்துவிடும்.

நடைப்பயிற்சி

கர்ப்பகாலத்தில், பிரசவம் நல்ல முறையில் நடக்க மருத்துவர் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய கூறியிருப்பார். அதனை பிரசவத்திற்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தினமும் காலை, மாலை என இருவேளைகள் நடைப்பயிற்சி மேற்க்கொள்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

சத்தான உணவுகள்

எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை மட்டுமே சாப்பிடாமல், வகைவகையாக சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என அனைத்தும் உங்களது உணவில் இருக்க வேண்டியது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button