ஆரோக்கியம் குறிப்புகள்

தமிழ் மொழி எப்படி பிறந்தது என்று தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி, மொழிக்கு மட்டுமின்றி வாழ்வியலுக்கும் இலக்கியங்களின் மூலம் இலக்கணமும் வகுத்த மொழி, நமது தாய் மொழி “தமிழ்”. கல் தோன்றா மன் தோன்றா முன்பே பிறந்த இனம் பேசிய மொழி. கல் என்பது கல்வியையும், மன் என்பது மன்னர் ஆட்சியையும் குறிக்கிறது.

உலகின் பழமையான மொழிகளில் முதல் மொழி தமிழ் – ஆய்வில் தகவல்!!!

அதாவது, கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மாந்தர்கள் கதைத்த மொழி தமிழ் மொழி. இன்றிய உலக மொழிகளும், அம்மொழிகளை பேசும் இன மக்களும் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இயல், இசை, நாடகத்தில் திளைத்து வளர்ந்த மொழி நமது உலக செம்மொழி தமிழ்.

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!

இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, உருவாகின என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயிர் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனும் உயிர் எழுத்துக்கள் நாக்கின் உதவி இன்றி, அதாவது நாக்கு வாயின் மேல் அண்ணத்தில் படாமல் வெறும் காற்றின் உதவியால் மட்டுமே உருவாகும் ஒலிகள் ஆகும். உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் கொண்டு உருவாகும் இந்த ஒலிகள் உயிர் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்படுகின்றன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனும் மெய் எழுத்துக்கள் நாக்கின் உதவிக் கொண்டு உருவாகும் எழுத்துக்கள் ஆகும். அதாவது, இந்த எழுத்துக்கள் உருவாகும் போது நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இந்த ஒலிகள் உருவாகும் போது காற்றின் பங்கு மற்றும் உதவியை விட, உடலின் பங்கு அதிகம் என்பதால் இவை மெய் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்பட்டன.

தமிழ் எழுத்துக்களும் உடல் பாகங்களும்
தமிழ் எழுத்துக்களும் உடல் பாகங்களும்
தமிழ் எழுத்துக்கள் நமது மார்பு, கழுத்து, தலை, மூக்கு போன்ற நான்கு இடங்களில் பிறக்கின்றன. இவை ஒலியாக வெளிப்பட உதடு, நாக்கு, பல், அண்பல் (மேல் பல் வரிசையின் அடிப்பகுதி), அண்ணம் (வாயின் மேல் பகுதி) உதவுகின்றன.

தமிழ் எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள்
உயிர் எழுத்து, மெய் எழுத்து மற்றும் இவை இரண்டின் கலப்பில் பிறந்த உயிர்மெய் எழுத்து மற்றும் “ஃ” எனும் ஆயுத எழுத்தையும் சேர்த்து தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் பிறந்துள்ளன.

உயிர் எழுத்துக்கள்: 12

மெய் எழுத்துக்கள்: 18

உயிர்மெய் எழுத்துக்கள்: 216

ஆய்த எழுத்து: 1 (ஃ)

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

வல்லினம், மெல்லினம், இடையினம்
வல்லினம், மெல்லினம், இடையினம்
க, ச, ட, த, ப, ற – என்ற ஆறு எழுத்துக்கள் வல்லினம்.

ங, ஞ, ண, ந, ம, ன – என்ற ஆறு எழுத்துக்கள் மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள – என்ற ஆறு எழுத்துக்கள் இடையினம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பாவாணர் கருத்து
பாவாணர் கருத்து
உலக மாந்தர் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ (படர்க்கை), இ (தன்னிலை) மற்றும் உ (முன்னிலை) என்பது பாவாணரரின் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை தான் த், ம், ழ் என்பவை ஆகும்.

தமிழ் பெயர் பிறந்த விதம்
தமிழ் பெயர் பிறந்த விதம்
த், ம், ழ் எனும் இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ = ‘த’ வாகவும், ம்+இ = ‘மி’ யாகவும், ழ்+உ = “ழு” வாகவும் என்று “தமிழு” என்று ஆக்கினர்

உகரத்தை நீக்குதல்
உகரத்தை நீக்குதல்
பிறகு கடைசி எழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி “தமிழு” என்பதை “தமிழ்” என்று அழைத்தனர். இது தான் நம் தாய் மொழிக்கு “தமிழ்” என்று பெயர் வந்ததன் காரணமாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button