மருத்துவ குறிப்பு

தற் கொலை எண்ணங்களை கையாள்வதற்கான சில நடைமுறை வழிகள்!!! உங்களுக்குதான் இந்த விஷயம்

தற்கொலை என்பது சுயமாக உண்டாக்கி கொள்ளும் மரணமாகும். தற்கொலை என்றால் சில பேருக்கு கோபம் ஏற்படும் அல்லது அதன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். பொதுவாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள வலிக்கு உதவும் கரங்களை மீறி அவர்களின் வலியின் தாக்கம் அதிகரிக்கும் போது அவர்கள் தற்கொலைக்கு முயல்வார்கள்.

தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகும். அது ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடும். ஒருவன் கெட்டவனாக பைத்தியகாரத்தனமாக இருப்பதால் அவன் தற்கொலை செய்து கொள்வதில்லை. அவனுக்கு உண்டான மிகுதியான வலியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே அவன் தற்கொலைக்கு முயல்கிறான். தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. தற்கொலை எண்ணங்களை கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும்.

என்ன தான் நேர்மறையான தேர்வுகள் இருந்தாலும் கூட, வலிகளை தாங்கி கொள்ள முடியாத தருணம் என்று ஒருவருக்கு வரக்கூடும். ஒருவர் தன் மன கட்டுப்பாட்டின் வரம்பை மீறும் போது, தற்கொலை எண்ணங்களை அவர் கையாள வேண்டும். அதனால் அடிப்படையில், தற்கொலை எண்ணங்கள் என்பது தனிப்பட்ட ஒரு மனிதன் கையாளும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுளின் சமமின்மையே.

தற்கொலை எண்ணங்களை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளது – ஒன்று வலியை குறைக்க முயற்சிப்பது, மற்றொன்று வலியை நீக்கும் உதவியை அதிகமாக பெறுவது. தற்கொலை எண்ணங்களை கையாள நாங்கள் சில நடைமுறை முறைகளை விவரித்துள்ளோம்.

நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்வது

நல்ல சமுதாயத்தோடு பழகுவது மிகவும் அவசியம். உங்களை சுற்றி நல்ல விஷயங்களை பேசுவதற்கு ஆட்கள் இருப்பதே தற்கொலை என்னத்தை தவிர்க்கும் ஒரு வழியாக அமையும். நல்லதொரு கூட்டத்துடன் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தற்கொலை எண்ணங்கள் உங்களை நெருங்காது.

எதிர்மறையான எண்ணங்களில் இருந்து மீண்டு வாருங்கள்

எதிர்மறையான எண்ணங்களை போக்க சந்தோஷமான எண்ணங்களுக்கு பதிலாக சமநிலையுடனான எண்ணங்களை அதிகமாக கொண்டு வர வேண்டும். தற்கொலை என்னத்தை போக்க இதவும் ஒரு முக்கியமான அம்சமாகும். இதனை மேம்படுத்த நேர்மறையான மக்களுடன் பழகி, எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்

தினமும் 8 மணி நேர தூக்கம், தினமும் சிறிது சூரிய ஒளியில் வெளியில் செல்வது, யோகா போன்ற தியான பயிற்சியில் ஈடுபடுவது, செல்லப்பிராணிகளை பராமரிப்பது போன்ற பழக்கவழக்கங்களில் ஈடுபட்டால் உங்கள் உடலுக்கும் நல்லது. இவ்வகையான நல்ல பழக்கங்கள் தற்கொலை என்னத்தை தூண்டாமல் தடுக்கும்.

உடற்பயிற்சி மற்றும் யோகா

மன அழுத்தத்தை கையாள இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக பயன்பட்டு வருகிறது. அதனால் உங்கள் தற்கொலை எண்ணமும் தொலைந்து போகும். ஆரோக்கியமான உடலுக்கு தேவையானதெல்லாம் தினமும் 30 நிமிட உடற்பயிற்சி. உங்கள் நாயை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, படிகளில் நடந்து செல்வது போன்ற எளிய முறைகளில் கூட இதனை கடைப்பிடிக்கலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமநிலையை கொண்டு வருவதற்கு யோகா பெரிதாக உதவிடும்.

ஆரோக்கியமான உணவு

நாம் உண்ணும் உணவு நம் மனநிலை மற்றும் எண்ணங்களோடு நேரடியாக தொடர்பில் உள்ளது. தற்கொலை எண்ணங்களை போக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, சமநிலையுடனான உணவுகளை தேர்ந்தெடுப்பது, ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவது போன்ற நல்ல உண்ணும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். இவையும் கூட உங்கள் தற்கொலை என்னத்தை போக்கும்.

வல்லுனர்களின் உதவியை நாடுவது

தங்களால் முடியாத பட்சத்தில் தான் பலரும் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கின்றனர். சரியான நேரத்தில் வல்லுனர்களின் உதவியை நாடி செல்வது உங்கள் உயிரை காக்கும். இதில் எந்த ஒரு ஆபத்தும் இல்லை; அவமானப்படவும் தேவையில்லை. சொல்லப்போனால் உங்கள் பிரச்சனையை தைரியத்துடன் அணுகுவதை எண்ணி சந்தோஷப்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button