சரும பராமரிப்பு

சருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க

22e929ce a0a8 4509 b766 430db20b4000 S secvpf
மேனி எழிலை பாதுகாக்க ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தினையும், அழகையும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழகை பாதுகாப்பதோடு சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.

பசும்பால் குளியல் :

கோடை காலத்தில் சருமம் உலர்ந்து விடும். இதனை தவிர்க்கவும் பளபளப்புடன் திகழவும், தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளிக்கலாம். ( கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்தாராம்). பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும். வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.

சந்தனம் ஆலிவ் எண்ணெய் :

ரசாயனக் கலவையும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்த சோப்பு தேய்த்து குளிப்பதை விட வீட்டிலேயே கிடைக்கும் மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் எடுத்து ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் பூசி ஊற வைக்கவும். பின்னர் 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும். மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button