கால்கள் பராமரிப்பு

கால்களில் உள்ள கருமையைப் போக்க சில அற்புத வழிகள்!!!

28 1438061846 1 lemonslicesandsalt
வெயிலில் முகம், கைக்கு அடுத்தப்படியாக பாதிக்கப்படுவது கால்கள் தான். அழகு வெறும் முகம் மற்றும் கைகளில் இல்லை. உடலின் அனைத்து இடங்களையும் அது குறிக்கும். பொதுவாக வெயிலில் அதிகம் படும் பகுதி மற்ற பகுதிகளை விட மிகவும் கருமையாக இருக்கும். இந்த கருமையை போதிய பராமரிப்பு கொடுத்து நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அது மோசமான தோற்றத்தைத் தரும். எனவே சிலர் கால்களில் உள்ள கருமையை நீக்க அழகு நிலையங்களுக்குச் சென்று பணம் செலவழித்து பெடிக்யூர் செய்து கொள்வார்கள். ஆனால் அப்படி பணம் செலவழிப்பதற்கு பதில், பெடிக்யூரை வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொண்டால், பணம் மிச்சம் அல்லவா?

சரி, இப்போது கால்களில் உள்ள கருமையை நீக்கி, பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

எலுமிச்சை மற்றும் உப்பு

எலுமிச்சையை துண்டுகளாக்கி, அதில் உப்பு தூவி, அந்த எலுமிச்சை துண்டை கால்கள் மற்றும் பாதங்களில் 10-15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பாத ஸ்கரப்

பாதங்களுக்கான ஸ்கரப் செய்வதற்கு, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வொரம் 2-3 முறை செய்து வந்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பு

4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் நிரம்பியுள்ள வாளியில் சேர்த்து கலந்து, அதில் சிறிது ஷாம்பு சேர்த்து கலந்து, அந்த கலவையில் கால்களை 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும், கால்களில் உள்ள கருமை மறைந்து, கால்கள் பொலிவோடு இருக்கும்.

மில்க் க்ரீம்

ஷாம்பு கலவையில் கால்களை ஊற வைத்து கழுவிய பின்னர், மில்க் க்ரீம் கொண்டு கால்களை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைந்துவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன்

1 டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அந்த கலவையை கால்களில் ஊற்றி, மென்மையாக பிரஷ் கொண்டு ஸ்கரப் செய்து, தேய்த்து கழுவி வர, கால்களில் உள்ள கருமை நீங்கி, கால்கள் மென்மையாகவும் இருக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

1 வாளி வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடை சேர்த்து கலந்து, அதனுள் கால்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், கால்களில் சேரும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, கால்கள் பளிச்சென்று இருக்கும்.

எலுமிச்சை, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் கால்களில் தடவி சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்கிவிடுவதோடு, கால்களில் உள்ள கருமையும் நீங்கிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button