மருத்துவ குறிப்பு

மாரடைப்பு ஏற்படும் அச்சமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

இதய நோய்களின் ஆபத்துகள் வயதுக்கு ஏற்ப அதிகரித்து வருகின்றன. இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, இந்த நோயைத் தவிர்க்கலாம். உலகில் மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

இதய நோயால் ஏற்படும் ஆபத்து : இதய தமனி நோய், மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தொற்று அல்லாத நோய்களுடன் தொடர்புடைய 45 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதேவேளை, 22 சதவீதம் பேர் சுவாச நோய்களாலும், 12 சதவீதம் பேர் புற்றுநோயாலும், 3 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் மரணமடைகின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதய நோய் : இதய நோய் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், இளம் வயதில் ஏற்படும் மாரடைப்புகளில் 80 சதவிகிதத்தை தடுக்கலாமென சுகாதார நிபுணர்கள் கூறிகின்றனர்.

மேலும், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு முறைகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், சரியான எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரித்தல் போன்றவற்றை இளம் வயதிலேயே தொடங்கினால், மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதய நோய் ஏன் ஏற்படுகிறது? இதய நோய் முக்கியமாக தமனி சுவரில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருட்கள் குவிவதால் ஏற்படுகிறது, இது பெருந்தமனி தடிப்பு என்று அழைக்கப்படுகிறது.

இது சிறு வயதிலேயே உருவாகத் தொடங்குகிறது மற்றும் உடலின் திசுக்களுக்கு போதுமான இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் இதயத்த்திற்கு அழுத்தம் கொடுக்கிறது . இது இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

இதய நோய் அறிகுறிகள் : இதய நோய்களின் அறிகுறிகள் என்பது, மார்பு வலி அல்லது அசெளகரியம், படபடப்பு, தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button