அழகு குறிப்புகள்

சளி, இருமல் உங்கள பாடாய் படுத்துதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

பொதுவாக குளிர்காலம் அல்லது மழைக்காலங்களில் பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஓர் பொதுவான ஆரோக்கிய பிரச்சனை தான் இருமல். இந்த இருமலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வறட்டு இருமல், மற்றொன்று சளியுடனான இருமல். ஒருவர் பல நாட்களாக இருமலை அனுபவித்தால், அது பல நோய்களுக்கான அறிகுறியாகும். மேலும் இருமலானது ஒருவரை அசௌகரியமாக உணர வைக்கும்.

அதில் வறட்டு இருமல் வறட்சியான குளிர் காற்றினால் ஏற்படக்கூடியது. அதே சமயம் சளியுடனான இருமலின் போது சளி வெளிவரக்கூடும். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் எடுத்த எடுப்பிலேயே இருமலுக்கான சிரப் மற்றும் மருந்துகளை எடுப்பதற்கு பதிலாக இயற்கை வழிகளை முயற்சிப்பது தான் நல்லது.

 

பழங்காலத்தில் கூட நம் முன்னோர்கள் இருமலுக்கு இயற்கை வைத்தியங்களைத் தான் பின்பற்றினார்கள். அதில் இருமலுக்கு பயன்படுத்திய பொருள் தான் இஞ்சி. கீழே இருமலில் இருந்து விரைவில் விடுபட வைக்கும் இஞ்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

 

இருமலுக்கான இஞ்சி வைத்தியங்கள்

இஞ்சி இதமான பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இருமலுக்கான சிரப்புகளில் ஒரு பொதுவான மூலப் பொருளும் இதுவாகும். அதோடு இது சளியை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது நுரையீரலில் இருந்து சளியை தளர்த்தி வெளியேற்ற உதவும். மேலும் தொண்டையின் பின்புறத்தில் இருமலைத் தூண்டும் வலிமிகுந்த கூச்ச உணர்வை இஞ்சி கட்டுப்படுத்தவும் செய்யும்.

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி சாறு நுரையீரலில் சளி உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும் இது தேங்கியுள்ள சளியை வெளியேற்ற உதவுகிறது மற்றும் தேனுடன் சேர்த்து இஞ்சியை எடுக்கும் போது தொண்டை எரிச்சலைக் குறைக்கிறது.

* ஒரு நற்பதமான இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, மெதுவாக விழுங்க வேண்டும்.

இப்படி தினமும் 2-3 முறை சாப்பிட்டு வந்தால், இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இஞ்சி மற்றும் உப்பு

ஒரு துண்டு நற்பதமான இஞ்சியை எடுத்து, உப்பு தொட்டு வாயில் போட்டு மெல்ல வேண்டும். இது அனைத்து வகையான இருமலுக்கும் நல்லது. குறிப்பாக வறட்டு இருமலை விட, அதிகப்படியான சளியால் ஏற்படும் இருமலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வறட்டு இருமலை சந்திப்பவர்கள் ஏற்கனவே தொண்டையில் எரிச்சலை சந்திப்பார்கள். இந்த வழியைப் பின்பற்றும் போது, அவர்கள் தொண்டையில் மேலும் எரிச்சல் அதிகரிக்கக்கூடும்.

இஞ்சி டீ

விரைவில் இருமல் குணமாவதற்கு, நற்பதமான இஞ்சி டீயைக் குடியுங்கள். அதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நீரானது பாதியாக சுண்டியதும், அதை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் தேன் கலந்து குடியுங்கள்.

இஞ்சி மற்றும் துளசி இலைகள்

இஞ்சியுடன் துளசி இலைகளை சேர்த்து எடுக்கும் போது, அது இருமலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும். அதற்கு இஞ்சி சாறுடன் மற்றும் துளசி சாற்றினை சேர்த்து, தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், இஞ்சி மற்றும் துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.

இஞ்சி கலவை

அதிகமான நெஞ்சு சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், மிளகுத் தூள், இஞ்சி சாறு, மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை குறைந்தது 10 நிமிடம் மெதுவாக சாப்பிட வேண்டும். இது நெஞ்சு சளி மற்றும் இருமலைக் குறைக்க உதவுகிறது.

இஞ்சி மற்றும் எலுமிச்சை

நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பது, உடலில் இருந்து சளியை வெளியேற்றவும், இருமலைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் இஞ்சி ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, உடல் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, சளியை நீக்க உதவி புரிந்து, இருமலால் ஏற்படும் நெஞ்சு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

இஞ்சி பொடி/சுக்கு பொடி

வாழ்வில் சளி பிரச்சனையை சந்திக்க கூடாது என்று நினைத்தால், அன்றாட உணவில் இஞ்சி பொடியை சேர்த்து வர வேண்டும். இதனால் சளிக்கு காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கும். அதற்கு உங்கள் அன்றாட சமையலில் 2 டீஸ்பூன் இஞ்சி பொடியை சேர்த்து வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button