தலைமுடி சிகிச்சை

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

எலுமிச்சை பலவித நன்மைகளை உடலுக்கு தரும் அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் இளமையாக இருகக்லாம் என கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எலுமிச்சையை தலைமுடிக்கு உபயோகப்படுத்தினால் பலவித நன்மைகளை தரும். ஆனால் அதன் பலன் முழுமையாக பெற எப்படி உபயோகிக்கலாம் என பார்க்கலாம்.

கூந்தல் அரிப்பிற்கு : எலுமிச்சை சாறு அரை மூடி எடுத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து தலையில், தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசினால் அரிப்பு நிற்கும்.

பிசுபிசுப்பான கூந்தலுக்கு : ஒரு முழு எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது பால் கலந்து தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள் அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் செபேசியஸ் சுரப்பியில் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைக்கப்படும்.

பொடுகிற்கு : குளிர்காலத்தில் அதிகப்படியான பொடுகு உண்டாகும். அதற்கு பூஞ்சை தொற்றே காரணம். அதனை தடுக்க எலுமிச்சை சாறில் சிறிது நீர் கலந்து தலையில் தடவவும். காய்ந்ததும் தலைமுடியை அலசுங்கள். பொடுகு மாயமாகிவிடும்.

ஸ்ட்ரெயிட் ஹேர் குறிப்பிற்கு : சிலருக்கு கூந்தல் வளைந்தபடி இருக்கும். கூந்தலை நேராக்க தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியில் தேயுங்கள். 1 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும்.

கூந்தல் அடர்த்தியாக வளர : கூந்தல் அடர்த்தியாக வளர எலுமிச்சை ஸ்கால்ப்பில் செல்களை தூண்டும். ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் சம அளவு எடுத்து அதனுடன் ஒரு எலுமிச்சை பழச் சாரை பிழிந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து நுனி வரை தேய்க்கவும். 40 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். வாரம் இருமுறை செய்தால் அடர்த்தியாக முடி வளரும்.

முடி உதிர்தலுக்கு : ஒரு எலுமிச்சை பழச் சாறு 1 ஸ்பூன் சீரகப் பொடி 1 ஸ்பூன் மிளகுப் பொடி ஆகியவ்ற்றை ஒன்றாக கலந்து தலையில் தேயுங்கள். நன்றாக காய்ந்ததும் தலைமுடியை அலசவும்.

கூந்தல் அழுக்கை அகற்ற : முடி உதிர்தல் மற்றும் கூந்தல் வளராமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சரும துவாரங்களில் அழுக்கு தங்குவதால். எலுமிச்சை அழுக்கை அகற்றி ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது

09 1478686808 hairloss

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button