பெண்கள் மருத்துவம்

கர்ப்ப காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாயின் ஒவ்வொரு மாற்றமும் ஏற்படும். உடலாலும் மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.

ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த காற்று, வாடைக்காற்று மற்றும் பனிக்காற்று வீசும் இடங்களிலும் ஜன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக்கூடாது. மழையிலோ மழைச்சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம்சூடான நீரில் குளித்து விட வேண்டும்.

எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரை பருகுவது நல்லது. அதிலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக சூடான நீரை குடிக்கக்கூடாது. குளிர்சாதன பெட்டியில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவு பொருட்களை தவிர்த்தால் ஜலதோஷம் வராது.

ஜலதோஷம் வந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். அதிக காரம் மற்றும் புளிப்பு போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது நல்லது.
c798643c bfb5 4b92 a6d3 51a770583e3c S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button