மருத்துவ குறிப்பு

பற்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது?மருத்துவர் கூறும் தகவல்கள்

நம் அனைவருக்குமே பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஒருவர் புன்னகைக்கும் போது பற்கள் வெள்ளையாக இருந்தால் தான், அந்த புன்னகையே அழகாக இருக்கும். ஒருவரது அழகிய தோற்றத்திலும் பற்களும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் அனைவருக்குமே பற்கள் வெள்ளையாக இருப்பதில்லை. பெரும்பாலானோர் மஞ்சள் நிற பற்களையே கொண்டுள்ளனர்.

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், அதை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தற்போது பற்களை வெண்மையாக்குவதற்கு டீத் ஒயிட்னிங் என்னும் முறையை மக்கள் தேர்ந்தெடுத்து மேற்கொள்கின்றனர். இருப்பினும், பற்களை இந்த செயற்கை முறையில் வெள்ளையாக்குவதால், அந்த செயல்முறையின் போது பற்கள் சேதத்திற்கு உள்ளாகின்றன. ஆனால் பற்களை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன?

மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்குவதற்கான வழிகளை தெரிந்து கொள்வதற்கு முன், பற்கள் எதனால் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம். கீழே பற்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும் சில பொதுவான காரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

* ஆரோக்கியமற்ற பழக்கங்களான் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது

* காபி மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது

* பற்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் பற்களில் உள்ள எனாமல் குறைவது

* மருத்துவ நிலைகளால் எடுக்கும் மாத்திரைகளில் உள்ள கெமிக்கல்கள்

* வயதாவதும் பற்களின் நிறத்தை மாற்றும்

இப்போது ஆரோக்கியமான மற்றும் வெள்ளையான பற்களைப் பெறுவதற்கான குறிப்புகளைக் காண்போம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு ஆய்வின்படி, ஆப்பிள் சீடர் வினிகர் வெண்மையான பற்களைப் பெற உதவும். இருப்பினும் ஆப்பிள் சீடர் வினிகரை குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை தினமும் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், பற்களின் மேற்பரப்பு சேதமடையும். எனவே ஆப்பிள் சீடர் வினிகரை சம அளவு நீருடன் கலந்து, அவ்வப்போது வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

பற்களைத் துலக்கவும்

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் குறைந்தது 2 முறை 2-3 நிமிடங்கள் பற்களைத் துலக்க வேண்டும். பற்களைத் துலக்கும் போது வாயின் ஒவ்வொரு பகுதியையும், குறிப்பாக நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். பற்களை வெண்மையாக்க வேண்டுமானால் டீத் ஒயிட்னிங் டூத் பேஸ்ட் வாங்கியும் பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான டயட்

வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பற்களின் நிறம் மாறக்கூடாது என்றால் பெர்ரிகள், காபி, பீட்ரூட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை பற்களின் நிறத்தை மாற்றக்கூடும்.

சாம்பல்

பல்வேறு டூத் பேஸ்ட் தயாரிக்கும் கம்பெனிகள், சாம்பல் உள்ள டூத் பேஸ்ட் மாட்கெட்டில் வெளியிட்டுள்ளன. ஏனெனில் சாம்பல் பற்களில் உள்ள கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள உதவும். வேண்டுமானால், தினமும் சாம்பல் கொண்டும் பற்களைத் தேய்க்கலாம். இதனால் பற்கள் நல்ல வெண்மை நிறத்துடன் ஜொலிக்கும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா

ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா இரண்டுமே பற்களில் உள்ள மஞ்சள் மற்றும் பிற கறைகளைப் போக்க வல்லது. வேண்டுமானால் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா நிறைந்த டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே 2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோவை ஒன்றாக கலந்து பேஸ்ட் தயாரித்து, பற்களில் தடவி மென்மையாக தேய்த்து கழுவலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button