மருத்துவ குறிப்பு

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா?இதோ எளிய நிவாரணம்

பெரும்பாலானவர்கள் வெளியே சொல்லவே சங்கடப்படும் பிரச்சனைகளில் ஒன்று “வாயுத் தொல்லை”.

என்றைக்கு நாகரிக பழக்கம் என பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் உண்ண தொடங்கினோமோ அன்றைக்கே விஸ்வரூபம் எடுத்து விட்டது வாயு பிரச்சனை.

வாயு ஏற்படுவது ஏன்?
குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் காரணமாகவே வாயு ஏற்படுகிறது.

மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம்.

இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும். கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும்.

உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம்.

 

நம் உடலில் தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது, இதில் பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது.

சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான்.

ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

அதிலும் அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் இருந்தால் மருத்துவரை பார்த்துவிடுவது நல்லது.

தினமும் எள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

யாரெல்லாம் வாயுத் தொல்லையால் பாதிக்கப்படலாம்?
உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும்.

உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.

 

தவிர்க்க வேண்டிய உணவுகள்
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு,

சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள்,

அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

சாப்பிட வேண்டிய உணவுகள்
காய்கறிகள்: அதிக மாவுப்பொருட்கள் இல்லாத, அதேசமயம் நார்ச்சத்து நிறைந்த அவரை, பீன்ஸ், கொத்தவரை, பாகல், பீர்க்கங்காய், புடலை, சுண்டைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்களை தினமும் 100 கிராம் அளவிற்கு உணவில் சேர்க்க வேண்டும்.

கீரைகள்: பொதுவாக கீரைகள் மலச்சிக்கலுக்கும், வாயுத் தொல்லைக்கும் ஒரே தீர்வாகும், தூதுவளை, பொன்னாங்கன்னி, வெந்தயக்கீரை, அகத்தி, பிரண்டை போன்றவற்றை பொரியாலாகவோ, துவையலாகவோ வைத்து சாப்பிடலாம்.

 

பழங்கள்: தினமும் மூன்று வேளையும் பழங்கள் சாப்பிடலாம், கொய்யா, மாதுளை, திராட்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய், பப்பாளி, வாழைப்பழம் போன்றவை குடலை சுத்தப்படுத்துவதுடன் வாயுத்தொல்லையை சரிசெய்யும்.

வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது

உடனடி தீர்வு
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர், ஓமம் சேர்த்த நீர், இஞ்சி அல்லது சீரகம் சேர்த்த நீரை அருந்தலாம், சற்றே வாயை மூடியபடி உணவை மென்று விழுங்குவதும் காற்று அதிகளவில் உள்ளே செல்வதை தடுக்கும்.
தண்ணீர்: மலத்தை இளகுவாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம், தண்ணீர் சரியான அளவில் குடித்தாலே செரிமானம் நன்றாக நடந்து அனைத்து வேலைகளும் சரியாக நடக்கும்.

சுக்கு காபி: காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள், இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.

வாயு தொல்லையால் பெரும் அவதியா? அப்ப இந்த கஞ்சியை குடிங்க போதும்

மிளகு சூரணம்: மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.

 

வெள்ளைப்பூண்டு: பூண்டிலிருந்து எடுக்கப்படும் சாற்றை அருந்தினால் தீர்வு கிடைக்கும் அல்லது பூண்டை வேகவைத்து சாப்பிட்டாலும் தீர்வை பெறலாம்.

புதினா இலைகள்: வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தாலும் நிச்சயம் பலன் கிடைக்கும்.

கொஞ்சமா சாப்பிட்டாலும் வயிறு உப்பிடுதா? இதனை போக்க என்ன செய்யலாம்?

தக்காளி சாறு: உணவருந்துவதற்கு முன்னர் அரை கிளாஸ் தக்காளி சாற்றை குடித்துவிட்டு, உணவருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும்.

வாழைப்பழம்: நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை, வாயுத்தொல்லை இருப்பவர்கள் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button