தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வதைத் தடுக்கும் இயற்கை வழிகள்

அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றைத் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் எண்ணெயில் போட்டுப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப் பிரித்துச் சேமியுங்கள். வார த்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

# வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

# அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.

f9cd40d2 f453 447b b8d9 da69b864e579 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button