மருத்துவ குறிப்பு

கோடையில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது கடைபிடிக்க விஷயங்கள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தின் காரணமாக, பெண்கள் சரும பாதிப்பு, வறட்சி, வியர்க்குரு போன்ற பிரச்சினைகளை சந்திப்பதுண்டு.

அதிலும் பெண்களுக்கு அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல், அழற்சி போன்ற தொந்தரவுகளால் சிரமப்படுகிறார்கள்.

குறிப்பாக  மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.

 

  • சரியான நாப்கினை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் சில நாப்கின்கள் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது. எனவே ரசாயனமற்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
  • கோடைகாலத்தில் நாப்கின்களை 2 முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. உதிரப்போக்கு அதிகமாக இருப்பவர்கள் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நாப்கின்களை மாற்றும் போது கைகளைக் கழுவுதல் அவசியம். இது நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்
  •   ஒரே நேரத்தில் இரண்டு நாப்கின்களை பயன்படுத்துவது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.
  •   அந்தரங்க உறுப்பை எப்போதும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாதவிடாய் நாட்களில் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். இதற்காக வேறு திரவத்தை பயன்படுத்தக்கூடாது.
  •  நாப்கின்கள் வைத்திருக்கும் போது, இறுக்கமான உடைகள் அணிவதால் தொடை இடுக்குகளில் தடிப்பை உண்டாக்கி மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதனால் சருமத்தோடு ஒட்டாத, காற்றோட்டமான ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.
  • பயன்படுத்திய நாப்கின்களை முறையாக காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் போடவேண்டும். குப்பைத் தொட்டியில் இருக்கும் நாப்கின்களையும் அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.
  • ஒரு நாளில் குறைந்தது 9 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலியின் காரணமாக சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். அதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதோடு, எளிமையான உடற்பயிற்சிகள் செய்தால் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கலாம்.

Related posts

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களுக்கு இந்த இடத்துல மச்சம் இருந்தால் செம லக்காம் ..!

nathan

உங்க ஈறுகளில் இரத்தம் வடிதலை தடுக்க தினமும் காலையில் இத குடிங்க!

nathan

இத படிங்க சீராக்கும் கருஞ்சீரகம் சீறிப்பாய்ந்து.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தடுப்பூசி ஏன் போட வேண்டும் தெரியுமா?

nathan

இதய நோய் இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

மூக்கிலிருந்து ரத்தப்பெருக்கு (Epistaxis)

nathan

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு போக்குவது எப்படி ?

nathan