மருத்துவ குறிப்பு

பச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்?தெரிந்துகொள்வோமா?

தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானது; புதிதாய் தாய்மை அடைந்த பெண்கள் எப்பொழுதும் ஒருவித குழப்பத்தில் இருப்பர்; அது என்னவென்றால், தான் கொடுக்கும் தாய்ப்பால் குழந்தைக்கு போதுமானதாக உள்ளதா? குழந்தையின் வயிறு முழுதும் நிரம்புகிறதா? நாள் ஒன்றுக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? எப்பொழுது கொடுக்க வேண்டும் என பல கேள்விகள் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் நெஞ்சினில் நிலவுகின்றன.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு அளிப்பது குறித்து பல கேள்விகளையும், குழப்பங்களையும் மனதில் கொண்டு உள்ளனர். தாய்மார்களின் குழப்பங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும் வகையில் இந்த பதிப்பு வழங்கப்படுகிறது. இந்த பதிப்பில் பச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும் என்று படித்து அறிவோம்.

மாதம் 1

குழந்தை பிறந்த முதல் நாள் இரண்டு முறை மட்டுமே பாலூட்ட வேண்டி வரும். அதன் பின்னர் ஒரு நாளைக்கு 8 முறையாவது தாய்ப்பால் புகட்ட வேண்டும், அதாவது 60-120மிலி பால் அளிக்க வேண்டும். புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் குடித்து முடிக்க குறைந்தது 40 நிமிடங்களாவது எடுத்துக்கொள்ளும். குழந்தைகள் வளர வளர அவர்கள் பால் குடிக்கும் ன்னேரம் 15-20 நிமிடங்களாக குறையும்.

இந்த முதல் மாத காலத்தில் குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம், குழந்தைக்கு பால் தேவை இருக்கும் போதெல்லாம் பாலூட்டுவது சாலச் சிறந்தது.

1-4 மாதங்கள்

இந்த வயதை எட்டிய குழந்தைகளுக்கு 2-3 மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டியது அவசியம், அதாவது ஒரு நாளைக்கு 120-210மிலி பால் அளிக்க வேண்டும். பார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு 120-150மிலி பாலை 1-3 மாத காலமும், ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை என அளிக்க வேண்டும்.

பார்முலா பால் குடிக்கும் குழந்தைகள் 150-210 மிலி பாலினை ஒவ்வொரு 2.5-3.5 மணி நேரத்திற்கு ஒருமுறை என 3-4 மாதங்களுக்கு குடித்தல் அவசியம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு இணை உணவு அளித்தல் கூடாது; ஏனெனில் குழந்தைகளின் தசைகள் உணவை செரிக்கும் அளவு வலிமை அடைந்திருக்காது.

4-6 மாதங்கள்

இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தை, ஒவ்வொரு நாளும் 1 லிட்டர் பாலினை குடிக்கத் தொடங்கியிருக்கும். இதுவே இணை உணவுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த உகந்த காலம். மேலும் இணை உணவுகளை குழந்தைக்கு கொடுக்கத் தொடங்கிவிட்டால், தாய்ப்பால் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற அர்த்தம் இல்லை; தாய்ப்பால் அளிப்பதோடு இணை உணவுகளையும் அவ்வப்போது அளிக்க வேண்டும்.

குழந்தைகள் 6 மாத வயதை எட்டும் வரை தாய்ப்பால் மட்டுமே அளிப்பது சிறந்தது; பின்னர் 6வது மாதத்தில் இணை உணவுகளை சேர்க்கத் தொடங்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இணை உணவுகள்

கூழ், கஞ்சி, மசித்த பழங்கள் என இணை உணவுகளை கொடுக்கத் தொடங்கலாம்; இந்த உணவுகளின் அளவு என்பது குழந்தைகளின் பசியைப் பொறுத்தது; குழந்தைக்கு தேவையான அளவு இணை உணவுகளை அளியுங்கள். குழந்தை தனக்கு உணவு வேண்டாம் என்பதை உணவினை துப்பியோ, உண்ண மறுத்தோ உங்களுக்கு தெரிவிக்கும்; குழந்தையின் அச்செய்கைகளை தாய்மார்கள் புரிந்து நடத்தல் வேண்டும்.

இணை உணவுகளுடன் 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பாலும் அளித்து வருதல் வேண்டும்.

 

6-8 மாதங்கள்

இந்த வயதில் குழந்தைகளுக்கு 2-3 மணி நேரத்திற்கு பால் புட்டியில் பால் அளிக்கலாம்; இதனுடன் 2-3 இணை உணவுகளை ஒவ்வொரு நாளும் அளிக்க வேண்டும். இந்த இணை உணவுகள் பழங்களாகவோ, இட்லி, தோசை, சாதம் போன்ற உணவுகளாகவோ இருக்கலாம்; ஒவ்வொரு 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை என உணவு அளிக்கவும்.

8-10 மாதங்கள்

இந்த வயதில் பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் 3 வேளைகள் உணவு அருந்தலாம்; மேலும் குழந்தைகளுக்கு பசி எடுத்தால், பால், பழச்சாறு, பழங்கள் என அளிக்கலாம். தாய்ப்பால் சுரப்பு அணைகளின் உடலில் இருந்தால், தாய்ப்பால் அளிப்பதை நிறுத்தாமல் அதையும் சேர்த்து குழந்தைக்கு கொடுத்து வரவும்.

10-12 மாதங்கள்

மேற்கூறிய வகையிலேயே உணவு முறையை இந்த காலகட்டத்திலும் தொடரவும்; 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு உணவு, பழங்கள், பால் என ஏதாவது உண்ண அளிக்கலாம். குழந்தைகள் ஒன்றரை அல்லது 2 வயதை அடையும் வரை கூட பால் கொடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button