மருத்துவ குறிப்பு

தாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

தாய்ப்பால் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது; தாய்ப்பால் குழந்தையை பிரசவித்த பெண்களின் உடலில் நிகழும் ஒரு அற்புதமான விஷயம். எதையெதையோ செயற்கை முறையில் தயாரித்து விட்டாலும், இனியும் இந்த தாய்ப்பாலை செயற்கை முறையில் தயாரிக்கும் முறை கண்டறியப்படவில்லை. இந்த விஷயம் மனதிற்கு சற்று நிம்மதியை தருகிறது.

ஏனெனில் பிறந்த குழந்தைகளுக்கு கலப்படம் இல்லாமல் கிடைக்கும் இந்த ஒரு விஷயத்திலாவது மனித கரங்கள் படாமல், கலப்படம் நிகழாமல் பாதுகாப்பாக உள்ளதே என்ற நிம்மதி தான். இந்த பதிப்பில் தாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளிவந்தால் என்ன அர்த்தம் மற்றும் இரத்தம் கலந்து வெளிவரும் தாய்ப்பாலை குடித்தால் குழந்தைகள் இறந்து விடுமா என்று படித்து அறியலாம்.

இரத்தம் வெளியாவது சாதாரணமானதா?

தாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளியாவது சாதாரணமானதா என்று கேட்டால் இந்த கேள்விக்கு ஆம் என்றும் பதில் கூறலாம்; இல்லை என்றும் பதில் கூறலாம். குழப்பமாக உள்ளது அல்லவா? தாய்ப்பால் அளிக்கும் பெண்களின் வெளிப்புற உறுப்பில் ஏதேனும் காயம் ஏற்பட்டு அதாவது மார்பகங்களின் முலைக்காம்புகள், மார்பக பகுதியில் ஏதேனும் காயம் ஏற்பட்டு இருந்து அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டால், அது தாய்ப்பாலில் கலந்து வெளியாகலாம்.

காயம் இல்லை எனில்..,

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மார்பகங்களில் எந்த ஒரு காயமும் இல்லை எனில், அது கொஞ்சம் சிக்கலான நிலை தான்; வெளிப்புற காயங்கள் ஏதும் இன்றி தாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால், தாய்மார்கள் குழந்தைகளுக்கு அந்த இரத்தம் கலந்த பாலை தருவதை சற்று நிறுத்தி, மார்பகத்தின் திட்டவட்ட நிலையை தெளிவாக உணர்த்தும் வண்ணம் சரியான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கவனிக்க வேண்டியவை!

குழந்தைகளுக்கு இரத்தம் கலந்த தாய்ப்பாலை கொடுக்கும் முன், தனது உடலில் என்னென்ன நோய்கள் உள்ளன, அவை இரத்தத்தால் பரவுமா, தனக்கு HIV உள்ளதா என்பது போன்ற தகவல்களை தாய்மார்கள் தெளிவாக அறிந்து இருக்க வேண்டும். அவ்வாறு தனது உடலை பற்றிய சரியான புரிதல் இருந்தால் தான் தாய்மார்களால் எந்த வித குழப்பமும் இன்றி குழந்தைக்கு பாலூட்ட முடியும்.

தாய்ப்பாலின் நிற மாற்றம்!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சில காலங்களாக தொடர்ந்து கொடுத்துக் கொண்டு இருந்தால், தாய்ப்பாலை கூர்ந்து கவனித்தால் அதில் நிற மாற்றம் ஏற்படுவதை காணலாம். இந்த நிற மாற்றம் வெண்மை நிற தாய்ப்பால், மஞ்சள் நிறமாக மாறி இருப்பதை காட்டும்; பின் இந்த மஞ்சள் நிறமும் மாறி நீலம் கலந்த வெண்மை நிறமாக மாறி விட வாய்ப்பு உண்டு.

நிற மாற்றம் ஏற்படும் பொழுதும் கூட ஒரு முறை மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது.

 

பிங்க் நிற பால்!

பிங்க் நிறத்தில் பெண்களின் மார்பகத்தில் இருந்து தாய்ப்பால் வெளிப்பட்டால் அது நிச்சயம் இரத்தம் கலந்ததாக தான் இருக்கும்; அந்த இரத்தம் உள்ளுறுப்புகளின் பாதிப்பால் ஏற்பட்டதா அல்லது வெளி உறுப்புகளின் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதை கட்டாயம் உறுதி செய்த பின்னர் தான் குழந்தைக்கு பால் அளிக்க வேண்டும்.

பொதுவாக பிங்க் நிற பால் வெளிப்பட்டால் அதை குழந்தைகளுக்கு அளிக்காமல் தவிர்ப்பது நல்லது.

மீறி கொடுத்தால்..!

குழந்தைகளுக்கு இந்த நிற மாற்றம் அடைந்த அல்லது இரத்தம் கலந்த தாய்ப்பாலை எந்த வித மருத்துவ ஆலோசனையும் இன்றி கொடுத்தால், அது குழந்தைகளின் உடலில் பெரிய பிரச்சனைகளை உண்டு பண்ணலாம். குழந்தைகளின் உடலில் வாந்தி, வயிற்றுப்போக்கு என்ற சிறிய அறிகுறிகளை வெளிப்படுத்தி, பெரிய பாதிப்புகள் வரை இந்த நிற மாற்றம் அடைந்த தாய்ப்பால் உண்டு செய்யலாம்.

நிற மாற்றம் சாதாரணமானதா?

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உண்ணும் உணவுகளை பொறுத்தும் கூட அவர்தம் உடலில் உருவாகும் தாய்ப்பாலின் நிறம் மாறுபடலாம்; அதாவது தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் அதிக அளவு பீட்ரூட் காயை உட்கொண்டால் அது சிவப்பு நிற பாலை வெளிப்பட செய்யலாம்; அதிகம் ஆரஞ்சு நிறம் கொண்ட காய் கனிகளை பெண்கள் உண்டால், அவர்களின் உடலில் இருந்து ஆரஞ்சு நிற பால் வெளிப்படலாம்.

எந்த ஒரு நிற மாற்றமாக இருந்தாலும், தகுந்த மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே குழந்தைக்கு பால் கொடுப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button