ஆரோக்கியம் குறிப்புகள்

மனைவியை எப்பொழுதும் மகிழ்விக்க என்னென்ன செய்யலாம்?

கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருவது இயல்பு தான். ஆனால் அந்த சண்டை முற்றும்போது பெரிய விரிசலே விழுந்துவிடுகிறது. இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும்.

அப்போது தான் வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்க்கொண்டாலும் அதில் இருந்து மீண்டு வர மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன், மனைவி சண்டை என்பது ஒரு நாளுக்கு மேல் நீடிக்க கூடாது.

அப்படி நீடித்தால் அன்று இரவுக்குள் இருவரும் சமாதானமாகி மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். உண்மையில் வாழ்க்கை துணையை நேசிக்கிறீர்கள் என்றால் அவர்களை காயப்படுத்தாமல், ஒவ்வொரு நாளும் அவர்களை உற்சாகப்படுத்த சில விஷயங்களை செய்ய வேண்டும்.

பெண்கள் தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா…. இனி மருத்துவரே வேண்டாம்!

மனைவியிடம் அன்பாக பழகுங்கள்
முதல் வழியாக மனைவியை மகிழ்விக்க நேர்மறையான விஷயங்களை அவரிடம் பேசுங்கள், நகைச்சுவையாக இருங்கள். அவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுங்கள்.

அடுத்ததாக மனைவியின் மனநிலை சோர்வுடனோ அல்லது சலிப்புடனோ இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி எடுங்கள். அவருடன் சேர்ந்து சிறிய சிறிய வேலைக்கு நீங்கள் பக்கபலமாக இருக்கலாம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] மனைவியின் ஆடை அலங்காரத்தை எப்போதுமே பாராட்டுங்கள். அதனை மிகவும் எதிர்ப்பார்ப்பார்கள். அதிலும் குறிப்பாக பொது இடங்களுக்கு செல்லும் போது தன்னுடைய ஆடை எப்படி உள்ளது என்று கணவர் கருத்து கூற வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள்.

முக்கியமாக மனைவியிடம் பொய் பேசுவதை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள். அது அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்து விடும். எந்த சூழலிலும் அவரிடம் உண்மையை பேசி உங்கள் மதிப்பை உயர்த்திக்கொள்ளுங்கள். மனைவி ஏதாவது தவறு செய்தால் அதை மனம் நோகாமல் சுட்டிக்காட்டுங்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பிடித்த சிவப்பரிசி இடியாப்பம்….இனி இப்படி செய்து ருசியுங்கள்!

மனைவியை எப்பொழுதும் மகிழ்விக்க என்னென்ன செய்யலாம்?

அதே தவறை திரும்ப செய்தாலும் அதை செய்ய வேண்டாம் என எடுத்துக்கூறுங்கள். மனைவி எந்த சந்தர்ப்பதிலாவது கோபப்பட்டால், பதிலுக்கு கணவரும் கோபப்படுவதை நிறுத்தி விடுங்கள்.

அவை இருவருக்கும் இடையே இடைவெளியை அதிகப்படுத்திவிடும். அதேப்போல், மனைவி ஏதாவது ஒரு பொருளை ஆசையாக விரும்பி கேட்டால், இல்லை என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு, கையில் பணம் இல்லாதபட்சத்தில், வந்தவுடன் வாங்கி தருவதாக கூறுங்கள்.

மனைவியை எப்பொழுதும் மகிழ்விக்க என்னென்ன செய்யலாம்?

தாம்பத்தியதில் அன்பாக இருங்கள்
முக்கியமாக கணவன் மனைவி தாம்பத்தியத்தை பற்றி பேசுகையில் வாக்குவாதம் உண்டாகலாம். அப்போது மனைவிக்கு பிடிக்காததை பற்றி பேசாமல் விட்டுவிடுவது நல்லது. அவர்களின் பிடித்தமான நேரத்தின் போது விருப்பத்துடன் தம்பத்தியம் வைத்துக்கொள்ளுங்கள்.

அதே தான் முக்கியம் என ஒரு போதும் காட்டிவிடாதீர்கள். மனைவி செய்யும் வீட்டு வேலைகளில் குறை கண்டுபிடிப்பதையே வாடிக்கையாக கொள்ளக்கூடாது. தவறு இருக்கும் பட்சத்தில் அவருடன் சேர்ந்து அந்த தவறை திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டதைப்போல கணவன் மனைவி இடையே எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அன்றே பேசி மறந்துவிட்டு அன்பாக இருப்பதே வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button