ஆரோக்கியம் குறிப்புகள்

கரு-த்தரிப்பை இயற்கை முறையில் தவிர்ப்பது எப்படி? தெரிந்துகொள்வோமா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன. முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

ரிதம் (காலண்டர்) முறை (Rhythm calendar method)

இந்த முறைப்படி மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சிப் பருவத்தில் உடலுறவைத் தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம் மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும் இந்த முறையில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

பில்லிங்ஸ் முறை (Billings or Ovulation Method)

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன் இது சற்று குறைந்த அளவில் வறண்டு கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்புத் தன்மை கரு முட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும் இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும்போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

உடலில் வெப்ப மாறுபாடு

பெண்களில் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தின் நடுப்பகுதியில் கண்காணித்தல் வேண்டும்.
அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும்போது உடலில் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்ஹிட் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்துக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.-News & image Credit: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button