ஆரோக்கியம் குறிப்புகள்

தூசி எரிச்சலை ஏற்படுத்துமா? கட்டுப்படுத்த எளிய குறிப்புகள்

பருவங்கள் மாறும்போது, ​​பெரும்பாலான மாசுபட்ட காற்று பெரும்பாலான மக்களுக்கு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே இருக்க முடியவில்லை. தாவணி கட்டுவதும், முடிந்தவரை முகமூடி அணிவதும் இதில் மிகவும் கடினமானது. பாதிக்கப்படாதவர்களுக்கான சில குறிப்புகள்.

​அழற்சியை கட்டுப்படுத்தும் சிட்ரஸ் பழங்கள்

 

விட்டமின் சி ஜலதோஷத்தைத் தடுக்கவும் ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவுகிறது.

உடலால் உற்பத்தி செய்யப்படும் ஹிஸ்டமைனின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒவ்வாமைக்கு எதிர்வினையாக இயற்கையான அன்டி – ஹிஸ்டமைனாக செயல்படுகிறது.

தும்மல், மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல் போன்ற அழற்சியால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க விட்டமின் சி உதவுகிறது.

தூசி மற்றும் மாசுக்களால் அழற்சி அதிகமாக ஏற்படும் போது திராட்சைப்பழம், எலுமிச்சை, இனிப்பு மிளகுத்தூள், ஆரஞ்சு மற்றும் பெர்ரி உள்ளிட்ட விட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

​தூசி, மாசுக்களால் ஏற்படும் ஒவ்வாமை

 

வானிலை மாற்றங்கள், பருவ கால மாற்றங்களினால் தூசு, மாசுக்கள் நம்முடைய சருமத்தை நேரடியாக பாதிப்பதோடு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, தூசிகளால் ஏற்படும் அழற்சியால் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா வரை அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம்.

ஆரம்பத்தில் இந்த அழற்சி வெறும் தும்மலில் இருந்து ஆரம்பிக்கும். பின் அப்படியே அதிகரித்து தொடர்ச்சியான தும்மல் உண்டாகும்.

இந்த சமயத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் கூட மிக முக்கியம். சில உணவுகள் அழற்சியை ஊக்கப்படுத்தும். அதிகரிக்கச் செய்யும். சில உணவுகளால் அழற்சி குறையும். அழற்சியை கட்டுப்படுத்தும் குறைக்கும் சில உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

​அழற்சியை கட்டுப்படுத்தும் வெங்காயம்

 

வெங்காயம் இயற்கையான அன்டி- ஹிஸ்டமைன் நிறைந்த ஒன்று. இது அழற்சி மற்றும் அழற்சியால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

நிறைய அழற்சி எதிர்ப்பு மற்றும் ஒக்ஸிஜனேற்ற பண்புகள் வெங்காயத்தில் இருப்பதால் அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சமைத்து எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் பச்சையாக எடுத்துக் கொள்வது இன்னும் சிறந்தது.

​அழற்சியை கட்டுப்படுத்தும் கொழுப்பு நிறைந்த மீன்

 

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. குறிப்பாக சால்மன் போன்ற மீன்களில் இருந்து கிடைக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பை மேம்படுத்தி ஆஸ்துமா அறிகுறிகளை விரட்டுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கொழுப்பு நிறைந்த மீன்கள் ஒவ்வாமையால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.

​அழற்சியை கட்டுப்படுத்தும் இஞ்சி

 

தூசி மற்றும் மாசுக்களால் மூக்கு, கண்கள், தொண்டையில் வீக்கம் ஏற்படுவது, கண்ணெரிச்சல் எனப் பல ஒவ்வாமைக்கான அறிகுறிகளை நமக்கு உண்டாகும்.

இந்த அறிகுறிகளை இயற்கையாகவே குறைக்க உதவும் ஒரு பொருள் தான் இஞ்சி. குமட்டல் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இஞ்சி மிகச்சிறந்த தீர்வாகச் செயல்படுகிறது.

இது உக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளாக பைட்டோ கெமிக்கல் கூறுகளை அதிகமாகக் கொண்டிருக்கின்றன.

​அழற்சி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

 

அழற்சியை சரிசெய்ய சில உணவுகள் எப்படி உதவுகின்றனவோ அதேபோல சில உணவுகள் அழற்சியை அதிகமாக்கவும் செய்யும். அந்த உணவுகள் எவையெவை என்று பார்ப்போம்.

முழு தானியங்கள் நல்லது தான். அதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் முழு தானியத்தை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்.

தூசுக்களால் அழற்சி உண்டாகும் பிரச்சினை உள்ளவர்கள் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சளி உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

மது எடுத்துக் கொள்ளக் கூடாது. அது அழற்சி பிரச்சினை உள்ளபோது இன்னும் கூடுதலாக மன அழுத்தத்தை உண்டாக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button