ஆரோக்கியம் குறிப்புகள்

உங்கள் குழந்தைக்கு வாய் புண்களில் இருந்து விடுபட எளிய வழி!

குழந்தைகளின் நாக்கு மற்றும் கன்னங்களில் வெள்ளை புள்ளிகளால் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. இது வாய்வழி புண் என்று அழைக்கப்படுகிறது. பூஞ்சை தொற்று பொதுவாக ஈரப்பதமான பகுதிகளில் ஏற்படுகிறது, எனவே குழந்தைகள் சில நேரங்களில் பூஞ்சை தொற்றுக்கு ஆளாக நேரிடும். மேலும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பு அவர்களை எதிர்த்துப் போராடுவதற்கு நன்கு வளர்ச்சியடையவில்லை.

உடலின் ஈஸ்ட் சமநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் நோய். நமது உடலின் இயற்கையான பாதுகாப்பை நோய் பாதிப்பு குறைக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுக்கு மற்றொரு பொதுவான காரணம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு ஆகும்” என்று ஹெலன் டெவோஸ் குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான மிராண்டா ஹில்லார்ட், எம்.டி கூறுகிறார்.

 

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தும் போது கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. அதனுடன் நல்ல பாக்டீரியாவும் சேர்ந்து அழிந்துவிடுகின்றன. இதனால் ஏற்படும் சமநிலையின்மை காரணமாக தேவையில்லாத உயிரினங்கள் உடலினுள் பெருக்கமடைகிறது.

குழந்தைக்கு வெண்புண் பாதிப்பிற்கான அறிகுறிகள்:

குழந்தையின் வாய், கன்னம் , நாக்கு போன்ற இடங்களை கவனமாக பார்ப்பதால் வெண்புண்ணை கண்டறிய முடியும். மேலும் குழந்தையின் உணவு பழக்கத்தை உற்று கவனிப்பதால் இதனை அறிந்து கொள்ள முடியும்.

* குழந்தையின் நாக்கு மற்றும் கன்னங்களில் வெண்மையான திட்டுக்கள் தோன்றும் அல்லது வெண்மையான அடர்த்தியான கோடுகள் தோன்றும். சில நேரங்களில் ஒட்டுமொத்த நாவிலும் ஒருவித எரிச்சல் உண்டாகும்.

* குழந்தைக்கு பசியுணர்வு குறைந்து காணப்படும்.

* குழந்தை பால் குடிக்கும்போது ஒருவித அசௌகரியத்துடன் இருக்கும்.

* நாவில் இருக்கும் வெண்புள்ளிகள் காரணமாக சுவை உணர முடியாமல் இருக்கும், இதனுடன் ஒருவித வலியும் சேர்ந்து குழந்தைக்கு அசௌகரியத்தை உண்டாக்கும்.

சிகிச்சை

உங்கள் குழந்தைக்கு வெண்புண் இருப்பதை நீங்கள் கவனித்தால் குழந்தை மருத்துவரிடம் அழைத்து சென்று பாதிப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். பொதுவாக நிஸ்டாடின் என்னும் பூஞ்சை எதிர்ப்பு மருந்து வெண்புண் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் மருந்தாகும். இது ஒரு மேற்பூச்சு மருந்து. குழந்தையின் நாவில் இந்த மருந்தை தடவுவதால் நாவில் உள்ள வெண்புண் மறையும். பொதுவாக பெற்றோர் இந்த மருந்தை நாவில் தடவ பட்ஸ் பயன்படுத்தலாம். குழந்தை தாய்ப்பால் குடித்து முடித்த பின்னர் இந்த மருந்தை தடவுவதால் மருந்து நாவில் இருந்து கரையாமல் தடுக்க முடியும்.

இருப்பினும் வெண்புண் தீவிரமாக இல்லாத நிலையில் குழந்தைக்கு அதிக அசௌகரியம் இல்லாமல் இருந்தால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அதனை சரி செய்ய முடியும். இது ஒரு இயற்கையான முறையாகும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதன் முதல் நிலை என்ன?

* குழந்தை உட்கொள்ளும் சர்க்கரை அளவைக் குறைப்பது. சர்க்கரை நிறைந்த உணவுகள் குறிப்பாக திட உணவுகள் பூஞ்சை பாதிப்பை அதிகரிக்கும் என்பதால் கட்டாயம் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

* குறிப்பாக சர்க்கரை சுவை அதிகம் கொண்ட பழங்கள், கார்போ சத்து அதிகம் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட ஜூஸ், செயற்கை இனிப்புகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரை பொருட்களை முற்றிலும் தவிர்த்தவுடன், வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி இந்த பாதிப்பிற்கான தீர்வுகளை முயற்சிக்கலாம். ஆனால் எந்த ஒரு தீர்வையும் முயற்சிக்கும் முன்னால் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

* குழந்தைக்கு எது சரியானது என்பதை குழந்தை மருத்துவரிடம் ஆலோசித்து, பின்பு அதனை பின்பற்றுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் முழுமையான வளர்ச்சி அடையாமல் இருக்கும் என்பதால் நீங்கள் பின்பற்றும் சில இயற்கை தீர்வுகள் கூட சில நேரங்களில் எதிர்மறை பக்க விளைவுகளை உண்டாக்கலாம். எனவே முதலில் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்த முறையாகும். மருத்துவ அனுமதி பெற்றவுடன் கீழ்காணும் எளிய வீட்டுத் தீர்வுகளை முயற்சித்து வாய் வெண்புண்ணைப் போக்கலாம்.

உப்பு நீர்

உப்பு இயற்கையாகவே கிருமி நாசினி பண்புகளைக் கொண்டது. மேலும் வெண்புண் இருக்கும் இடத்திற்கு இதமளிக்கும் தன்மை உப்பிற்கு உண்டு. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின் பஞ்சுருண்டையை இந்த நீரில் நனைத்து வெண்புண் உள்ள இடங்களில் மெதுவாக தடவி விடவும்.

பேக்கிங் சோடா

சோடியம் பை கார்போனேட் என்னும் பேக்கிங் சோடாவின் திரவ வடிவம் வெண்புண்ணை எதிர்த்து போராட உதவும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சை இந்த நீரில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். தாய்ப்பால் பருகும் நிலையில், தாயில் மார்பு முளையில் இந்த திரவத்தை தடவிய பின் குழந்தை தாய்ப்பால் பருகுவதால் கூட சிறந்த நன்மை கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் கப்ரிலிக் அமிலம் என்ற ஒரு மூலப்பொருள் உள்ளது. இந்த மூலப்பொருள் வெண்புண்ணை போக்க உதவும். தேங்காய் எண்ணெய்யை பஞ்சில் நனைத்து வெண்புண் உள்ள இடத்தில் தடவலாம். ஆனால் குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் குறித்த ஒவ்வாமை இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் இதனை முயற்சிக்கவும்.

யோகர்ட்

இயற்கையான யோகர்ட்டில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றை புரோபயோடிக் என்று கூறுவோம். இந்த கூறு குழந்தையின் வாயில் பூஞ்சை சமநிலையை உண்டாக்கும். இதனால் வெண்புண் பாதிப்பு முற்றிலும் நீங்கும். மீண்டும் பரவாமல் தடுக்கப்படும். குறிப்பாக இனிப்பு இல்லாத யோகர்ட் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் வெண்புண் உண்டாக்கும் கேண்டிடா அல்பிகன்ஸ் என்னும் கிருமிக்கு சர்க்கரை மிகவும் விருப்பம். யோகர்ட் உட்கொள்ள முடியாத அளவிற்கு சிறு குழந்தை என்றால் சிறிதளவு யோகர்ட் எடுத்து பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். அல்லது குழந்தைக்கு பாதுகாப்பான புரோபயாடிக் உணவுகளை தேடி அவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அவர்களின் உணவில் லாக்டோபாகில்லஸ் கொண்ட யோகர்ட் சேர்க்க மருத்துவர் பரிந்துரைக்கலாம். லாக்டோபாகிலி என்பது நல்ல பாக்டீரியாக்கள் ஆகும். அவை உங்கள் குழந்தையின் வாயில் உள்ள பூஞ்சை தொற்றை அகற்ற உதவும்.

குழந்தைக்கு வெண்புண் வராமல் தடுப்பது எப்படி?

குழந்தைக்கு அவ்வப்போது வெண்புண் வராமல் தடுக்க, குழந்தை வாயில் வைக்கும் பொருட்களை பெற்றோர் வெந்நீரில் சுத்தம் செய்து பின் அவற்றை குழந்தை கையில் கொடுக்க வேண்டும். குழந்தை பால் குடிக்க பயன்படுத்தும் நிப்பிள் போன்றவற்றை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின், வெந்நீரில் கழுவி வைக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டியவைகள்:

* தயிர், கொம்புச்சா, கிம்ச்சி போன்ற இயற்கையாகவே ப்ரோபயாடிக் அதிகம் உள்ள புளித்த உணவுகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

* உங்கள் தினசரி உணவில் ஒரு நல்ல ப்ரோபயாடிக் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள்.

* ஜங்க் உணவுகள், சர்க்கரை மற்றும் சோடா ஆகியவற்றை உணவில் இருந்து முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

* இயற்கை சர்க்கரை நிறைந்த பழங்கள் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.

* பூண்டு, தைம், ஆரிகானோ, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், கருஞ்சீரகம், பூசணி விதைகள் போன்ற பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்.

குறிப்பு

* பொதுவாக இரண்டு வாரங்களில் இந்த பாதிப்பு சரியாகிவிட வேண்டும். தொடர்ந்து இந்த பாதிப்பு நீடித்தால், தொற்று அல்லது அறிமுகமில்லாத உயிரின பெருக்கம் உண்டாவது உறுதியாகிறது என்பதால் மருத்துவ உதவி அவசியம்.

* தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வெண்புண் ஏற்பட்டால் அதனையும் சிகிச்சை அளித்து சரி செய்ய வேண்டும், இல்லையென்றால் அது குழந்தைக்கும் பரவ நேரலாம்.

* 9 மாதத்திற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி வாயில் வெண்புண் ஏற்பட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இது மற்ற ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button