ஆரோக்கியம் குறிப்புகள்

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது? தெரிந்துகொள்ளுங்கள் !

ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும். வைரத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? மிக விலை உயர்ந்த கற்களில் வைரமும் ஒன்று.

ராசிக்கல் என்பதைத் தவிர்த்து, வைர நகைகளை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்புவார்கள். ஆனால், பிற உலோகங்களை வாங்குவது போல, வைரத்தை, நகையாக இருந்தாலும், ரத்தினக் கல்லாக ராசிக்கு வாங்கினாலும் சரி, அத்தனை எளிதாக அல்லது உடனடியாக வாங்கிட முடியாது.

நகைகள் வாங்கும் போதே, வைரத்தில் தோஷம் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். வைர நகை வாங்கும் போது. ஆங்கிலத்தில் CCC ஐப் பார்க்க வேண்டும், அதாவது Cut, Clarity மற்றும் Carat என்ற அடிப்படையில் வாங்க வேண்டும். அதே போல, வைரம் அணிவது எல்லா ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்காது. 12 ராசிகளுக்கு, ஒரு சிலர் மட்டுமே, வைரத்தை அணிவது அதிர்ஷ்டமாக இருக்கும். வேத ஜோதிடத்தின் படி, எந்த ராசிக்காரர்கள் எல்லாம் வைரம் அணிவது சாதகமாக இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

வைரம் அணிவதால் சுக்கிரன் சார்ந்த அம்சங்கள் மேம்படும்… காதல் மற்றும் உறவுகளை ஆளும் கிரகம் சுக்கிரன். இது வாழ்வின் அனைத்து இன்பங்களையும் வழங்குகிறது. மேலும், சுக்கிரன் படைப்பாற்றலையும் குறிக்கிறது. கருணை, வசீகரம், ஆடம்பரம், நல்ல தூக்கம், மற்றும் அழகு ஆகியவற்றையும் சுக்கிரன் குறிக்கிறது.

சுக்கிரனை மிகச்சிறந்த முறையில் குறிக்கும் ஒரு சொல் ” மிகுதி “. இந்த அனைத்து குணாதிசயங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வைரங்களுடன் தொடர்புடையவை. ஜோதிட ரீதியாக, வைரம் சுக்கிரனின் நேர்மறையான சக்திகளைக் குறிக்கின்றது.

எனவே, எந்தவொரு நபரின் ஜாதகத்திலும் சுக்கிரன் சக்தி வாய்ந்ததாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அதிகமாகக் கொடுத்து, வசதியாக வாழ வைக்கும். வைரம் வாங்கியவுடனே, ஒரு சிலருக்கு உடனடியாக நல்ல அதிர்ஷ்டத்தையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ தரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜோதிட ரீதியாக சில ரத்தினக் கற்கள் பிரபஞ்சத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் ஒன்றோடு தொடர்புடையது.

வாழ்க்கையில் அழகான, சொகுசான, மற்றும் ஆடம்பரமான விஷயங்கள் அனைத்தும் சுக்கிரனின் அம்சத்தைக் கொண்டுள்ளன. மேலும், சுக்கிரன் வானத்தில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் ஒரு கிரகம். எனவே, வைரத்தின் ஒளிரும் தன்மை மற்றும் நேரடியான ரிஃப்லகஷனுக்கு பொருந்தும் கிரகம் சுக்கிரன். ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும்.

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்? சுக்கிரன் 12 ராசிகளில், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளை ஆட்சி செய்கிறது, மீன ராசியில் உச்சம் பெறுகிறது மற்றும் கன்னி ராசியில் நீசம் ஆகிறது. இந்த அடிப்படையில், சுக்கிரனின் ஆட்சி வீடுகளான, ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணிவது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். சுக்கிரன் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் மேம்படும்.

இவர்கள், ஜாதகம் பார்த்து வைரம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்ததாக, எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், ஜாதகத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றிருந்தால், வைரம் அணிவது, அதிர்ஷ்டமான பலன்களைத் தரும். ஒரு சில விதிமுறைகளின் அடிப்படையில் வைரத்தை அணியலாம். உதாரணமாக, சனியின் ஆளும் ராசியான மகர ராசி மற்றும் கும்ப ராசியினர் பிளாட்டினத்தில் உள்ள வைரத்தையும், நீல நிற சபையருடன் சேர்த்து அணியலாம்.

மற்ற ராசிகளான கடகம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால், வைரம் அணிவது நல்ல பலன்களைத் தரும். எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது? மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, வைரம் அணிவது அவர்களின் வாழ்க்கையில் ஒற்றுமையை சீர்குலைக்கும். ஆனால், ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கும் எந்த ராசிக்காரர்களும் வைரம் அணியலாம்.-News & image Credit: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button