உடல் பயிற்சி

முதியவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை

உடற்பயிற்சியைத் ஒழுங்காக மேற்கொள்வதன் மூலமாக குறிப்பிட்ட வியாதி நம்மை அணுகவிடாது தடுத்துவிடலாம். அனேகமான முதியவர்கள் போதுமானளவிற்கு உடற்பயிற்சி செய்வதில்லை. உடற்பயிற்சியானது உடலையும் மனதையும் செயலிழக்காமல் வைத்திருக்க உதவி புரிகின்றது.

ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி செய்பவர்கள் தமது முதிர்ச்சியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடிகின்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்து கொள்வதன் மூலமாக குறிப்பிட்ட நோயிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் சுலபமான சில உடற்பயிற்சிகளையும் விளக்கியிருக்கின்றார்கள்.

1. மூச்சை உள்இழுத்தபடி கைகளைத் தலைக்கு மேல் உயர்த்துதல்.

2. படிகளை உபயோகித்தல்.

3. சிறந்த முறைகளில் பொழுதைப் போக்குதல், பறவைகளைப் பார்த்தல், மீன்பிடித்தல், தோட்டம் செய்தல்

4. நடனங்களில் ஈடுபாடு கொள்ளுதல்

5. இலகுவான வீட்டு வேலைகளில் ஈடுபடுதல்

6. மோல்களில் நடத்தல்

7. இலகுவான உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்

8. நடத்தல்

9. யோகாசனம் உடலுக்கு மட்டுமல்ல மனதினையும் சாந்தப்படுத்த வல்லது.

10. தியானம் போன்றவைகளும் மூளையின் செயற்பாட்டினை அதிகரிக்க வல்லது.

– கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாவிட்டாலும் இந்த எளிய பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் கூட உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.
7624fff9 6da3 4cdb b269 4a785193ac21 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button