சரும பராமரிப்பு

தெளிவான சரும அழகு பெற 5 வழிகள்

தெளிவான சரும அழகு பெற 5 வழிகள்:
ஒரு குறைபாடற்ற முகத்தில் உள்ள மாசு மருவை மறைக்க முகத்தில் கிரீம் பயன்படுத்துகிறோம். நாம் அதை மறைக்க பயன்படுத்தும் முகமூடிதான் முக அழகு க்ரீம்கள். தெளிவான முக அழகை பெற புகழ் பெற்ற மருத்துவர் டென்டி என்கேள்மென் (Dendy Engelman, MD) சில குறிப்புகள் நமக்கு அளித்து உள்ளார்.

1. முகத்தை மேல் நோக்கிய வாறு சுத்தம் செய்யவும்:

லோஷன் மற்றும் சீரம் போன்றவற்றை முகத்தில் உபயோகிக்கும் போது மேல் நோக்கி சுத்தம் செய்யவும்” என்று என்கேள்மென் சொல்கிறார். (விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்)இப்படி சுத்தம் செய்வ‌தின் மூலம் முகத்தின் மேற்பரப்பில் ஊடுருவி இருக்கும் எண்ணெய்கள், அழுக்கு, மற்றும் பாக்டீரியாவை நீக்கலாம்.
2. முகத்திற்கு கீழ் நோக்கியவாறு மேக் அப் செய்யுங்கள்:
என்கேள்மென் சொல்வது என்னவென்றால், முகத்திற்கு ஒப்பனை என்று வரும் போது மேலிருந்து கீழாக ஒப்பனை செய்யவும், இதனால் நீங்கள் செய்யும் ஒப்பனையினால் முகத்தின் உள்திசுக்கள் பாதிப்படையாது.

3. நாள் முடிவில் ஒப்பனையை கண்டிப்பாக கலைத்துவிடவும்:

ஒப்பனையை கலைக்க சோம்பேறித்தனம் படுபவர்களுக்கு, ஒரு சுலபமான வ்ழிமுறை, கிளியரஸ்ட் அல்ட்ரா ரேபிட் ஆக்சன் ஆன் தி கோ வைப்ஸ் (Clearasil Ultra Rapid Action On-The-Go Wipes ($6.28, walmart.com)) போன்ற முக துடைப்பான்களை பயன்படுதுங்கள். இதனை பயன்படுத்தி எளிதாக மேக் அப்பை சுத்தம் செய்யலாம்.

4. புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்

முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள், இல்லை எனில் அதிக படியான உடல் சூட்டின் காரணமாக முகத்தில் தோல் உரிந்து, (விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்)அது முக துவாரங்களில் தாங்கி விடுகிறது. அதோடு மட்டும் அல்லாமல், இறந்த செல்களும் முகத்திலேயே தங்கி விடும். இதனால் முகத்தில் கரும் புள்ளிகள், கருந்திட்டுக்கள் தோன்று கின்றன.
5. சருமத்திற்கு ஓய்வு கொடுங்கள்:

வாரத்திற்கு ஒருமுறை ஒரு நாள் முழுதும் ஒப்பனை இல்லாமல் இருங்கள். இப்படி செய்வத்தின் மூலம் முகப்பரு மற்றும் வாசனை திரவியங்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமை போன்றவற்றிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கலாம்

images

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button