ஆரோக்கியம் குறிப்புகள்

பிறரை பார்த்து பொறாமை கொள்ளாத ராசி எது தெரியுமா?

எல்லா மனிதர்களுக்கும் பொறாமை என்பது சகஜம். மேலும் இன்றைய காலத்தில் பொறாமை இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம், ஏனென்றால் நாம் யாராக இருந்தாலும், நம் வாழ்க்கையில் ஒரு கணம் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் நண்பரின் பதவி உயர்வு முதல் அன்புக்குரியவரின் மகிழ்ச்சி வரை சில விஷயங்களை நான் பொறாமைப்படுவதில்லை. ஏனென்றால், நம் அன்புக்குரியவர்கள் வளர்வதையும் மகிழ்ச்சியாக இருப்பதையும் நம்மில் பலர் உண்மையிலேயே ரசிக்கிறோம். ஜோதிடத்தின் படி யாரையும் பார்த்து பொறாமை கொள்ளாத ராசிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பொறுமை, புத்திசாலித்தனம் மற்றும் அமைதியான வார்த்தைகளால் தங்கள் வாழ்க்கையை எழுதுபவர்கள். இவர்கள் மிகவும் கனிவான மற்றும் எப்போதும் மற்றவர்களின் மகிழ்ச்சியை கண்டு பொறாமை குணம் கொள்ளாதவர்கள். இவர்கள் மற்றவர் மகிழ்ச்சியை தங்களின் மகிழ்ச்சியாக நினைத்து ஒவ்வொரு விஷயத்திற்கும் சந்தோசப்படுகிறவர்கள். தங்களின் மாநாடகத்தில் பட்டத்தை மாறாமல் கூறும் குணம் கொண்டவர்கள். உங்கள் மகிழ்ச்சியையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள கன்னி ராசியை நீங்கள் எளிதாக நம்பலாம், அவர்கள் உங்களை ஒருபோதும் எடைபோட மாட்டார்கள்.

​துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்கள் சமநிலையில் இருப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இது தவிர, இவர்கள் மிகவும் புத்திசாலிகலாகவும் அக்கறையுள்ளவர்கலாகவும் காணப்படுகிறார்கள். எனவே, அவர்கள் நெருங்கியவர்கள் சிரிக்கும்போது அதை தன்னுடைய மகிழ்ச்சியாக நினைத்து புன்னகைக்கிறார்கள்.

தங்கள் அன்புக்குரியவர்களின் வெற்றிக்கான மகிழ்ச்சி அவர்களை அவர்களை இன்னும் சிறப்பாக்குகிறது மேலும், இவர்கள் பொறாமைக்கும் பதிலாக எப்போதும் நேர்மறையான விஷயங்களை மட்டுமே பார்க்கிறார்கள். துலாம் ராசியில் பிறந்தவர்கள் சீரான மற்றும் நிலையான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் யாருடைய வாழ்க்கையிலும் விளையாடாமல் கவனத்துடன் செல்கிறார்கள்.

​மகரம்

மகர ராசி பூமியின் அடையாளமாக இருப்பதால், இவர்கள் யாருடைய வளர்ச்சியை கண்டும் பொறாமைப்படுவதில்லை. இவர்கள், நல்ல முன்னோக்கு சிந்தனையுடையவர்களாகவும் எதையும் பற்றுடன் செய்யக்கூடிய மனநிலையை கொண்டவர்கள். இவர்கள், தங்கள் சகாக்கள், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு உண்மையான நண்பனாக இருப்பதில் மனமகிழ்ச்சி அடைகிறார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இவர்கள் தங்களுக்கு கிடைத்தவற்றை வைத்து மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். இதை என்னால் செய்யமுடியவில்லை என ஒரு போதும் வருத்தப்பட்டு அழமாட்டார்கள். ஒவ்வொரு விஷயத்தையும், அவர்கள் கவனமாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள், தங்கள் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு உதவித்தேவைப்படும் போது யோசிக்காமல் வந்து நிற்கும் குணம் கொண்டவர்கள்.

​மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாக கவலையற்றவர்களாகவும், கவனம் செலுத்துபவர்களாகவும், சுய அன்பால் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள், மற்றவர்களை ஊக்குவிப்பதில் ஒருபோதும் சளிக்காதவர்கள். மேலும், இவர்கள் நிதானமான மனநிலை மற்றும் தூய்மையான இதயத்தை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் மகிழ்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள்.

மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் முன்னோக்கு சிந்தனை உள்ளவர்கள். அதனால், தான் இந்த ராசியுடைய உயிரினங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் புத்திசாலித்தனமாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு விஷயங்களை மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுவதுடன், அதை கவனமாக செய்து திருப்தி அடைகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button