ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த உணவுகளை ஆண்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது!

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ விரும்பும் போது, ஆண், பெண் என இருபாலருக்கும் உண்ணும் உணவுகள் அதில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன.

இருப்பினும், குறிப்பிட்ட சில உணவுகளை ஆண்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் ஆண்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியது.

சோயா உணவு பொருட்கள்
சோயா பொருட்களின் பைட்டோஈஸ்ட்ரோஜென் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? பைட்டோஈஸ்ட்ரோஜென் என்றால் என்ன? இவை ஆபத்தானதா? என்பன போன்ற கேள்விகள் நிச்சயம் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

பைட்டோஈஸ்ட்ரோஜென்கள் என்பவை தாவரங்களில் இருந்து பெறப்படும் ஈஸ்ட்ரோஜென் போன்ற பொருளாகும்.

அதிகளவிலான உட்கொண்டால், அது உடல் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு உண்டாக்கி இடையூறை ஏற்படுத்தலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாஸ்டனில் உள்ள கருவுறுதல் கிளினிக்கில் 99 ஆண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, அதிகளவிலான சோயா பொருட்களை உட்கொள்வது ஆண்களின் விந்து செறிவை குறைக்கக்கூடும் என தெரிய வந்தது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பிரெஞ்சு ப்ரைஸ்
நல்ல சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் ஓர் சுவையான உணவுப் பொருள் தான் பிரெஞ்சு ப்ரைஸ். மேலும் இது டிரான்ஸ் கொழுப்புக்களை ஏராளமாக கொண்ட உணவுப் பொருளும் கூட.

இந்த டிரான்ஸ் கொழுப்புக்கள் தான் ஒருவருக்கு ஏற்படும் இதய நோய்கள் மற்றும் மாரடைப்புக்கு முக்கிய காரணம். மாரடைப்பு பெண்களை காட்டிலும் ஆண்களையே அதிகம் தாக்கும் என்பது முக்கிய விடயமாகும்.

இந்த உணவுகளை ஆண்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது! எச்சரிக்கை பதிவு | Men Avoid Some Eating Food Danger

பாப்கார்ன்
பாப்கார்னை சாப்பிட்டுக் கொண்டே திரைப்படம் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், பெரும்பாலான நேரங்களில், பாப்கார்ன் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள், அதிக சோடியம் மற்றும் கார்சினோஜென்களால் நிறைந்திருக்கின்றன.

எனவே சுபல செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படும் பாப்கார்னை சாப்பிடுவது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அனைத்து வகையான நோய்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன என்பதை அனைவருமே அறிவோம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் என்றால் என்ன? ஹாட் டாக்ஸ், பேகன், சலாமி போன்றவை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பல ஆய்வுகளில் இம்மாதிரியான இறைச்சிகளை உட்கொள்வது, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே ஆண்கள் இந்த மாதிரியான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதை அறவே தவிர்ப்பது நல்லது.

இந்த உணவுகளை ஆண்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது! எச்சரிக்கை பதிவு | Men Avoid Some Eating Food Danger

manithan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button