பெண்கள் மருத்துவம்

பருவத்தை அடையும் முன்பு ஏற்படும் முதல் மாற்றம் என்ன?

சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் நீராட்டு விழா ஒவ்வொரு சிறுமியின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. 12 முதல் 14 வயதுக்குள்தான் பெண்கள் பருவமடைந்து வந்தனர். இந்த நிலை மாறி தற்போது 7 அல்லது 8 வயதுக்கு உள்ளாகவே பூப்படைகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தும் உள்ளது.

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவப் பள்ளி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து சமீபத்தில் புதிதாக ஒரு ஆய்வு நடத்தின. ஆய்வுக்காக 6 வயது முதல் 8 வயது வரை உள்ள ஆரோக்கியமான உடல் தகுதி, சரியான உடல் எடை, அதிக பருமன் உள்ளவர்கள், நிற பேதங்கள் உள்ளவர்கள், என பலதரப்பை சேர்ந்த 1,239 சிறுமிகள் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். ஆய்வு முடிவு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: சிறுமிகளின் உடல்எடை, அவர்களின் உணவு மற்றும் இதரப் பழக்கங்கள், நிறம், மனஅழுத்தம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பூப்படைவதற்கும் நெருங்கிய தொடர்பு ; இருக்கிறது. அதிக உடல் எடையால் உடலில் உள்ள கொழுப்பு சத்து செக்ஸ் ஹார்மோன்களை விரைவில் தூண்டி அதிக அளவு சுரக்கச் செய்கின்றன. சிறு வயதிலேயே சிறுமிகள் வயதுக்கு வர இது முக்கிய காரணம்.

அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மார்பக வளர்ச்சியை தூண்டுகின்றன. அதனால், பூப்படையும் முன்பே மார்பகங்கள் வளர்ச்சி பெருகின்றன. உடலின் நிறத்துக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. சிவப்பு நிறத்தில் உள்ள சிறுமிகள் முன்கூட்டியே பூப்படையும் வாய்ப்பு குறைவு. கருப்பு நிற சிறுமிகள் முன்கூட்டியே பூப்பெய்துகின்றனர். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி குறித்து வெளியாகும் சிறப்பு மருத்துவ இதழில் இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
poperti

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button