ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே பூமியில் வாழ்வதற்கு எப்படி தயாராகிறார்கள் தெரியுமா?

நம் மூலம் உலகில் நுழையும் குழந்தைகள்தான் நம் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். அந்தக் குழந்தைகளைப் பற்றி நாம் அறிந்திருப்பது போதாது. மனித பிறப்பு கற்றலை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் நடக்கும் அனைத்தும் நமக்கு பாடம் கற்பிக்கின்றன. ஆனால் இந்தக் கற்றல் பிறப்பிலிருந்தே தொடங்குகிறதா

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே வயிற்றில் இருக்கும்போதே சில விஷயங்களைக் கற்றுக்கொள்வதை நாம் பொதுவாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் குழந்தைகள் தாயின் வயிற்றில் நாம் உணர்ந்ததை விட அதிகம் கற்றுக் கொள்கின்றன. இந்த இடுகையில், தாயின் வயிற்றில் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் அற்புதமான விஷயங்களைப் பார்ப்போம்.

மனஅழுத்தம்
அம்மாக்கள் எந்த அளவிற்கு பதட்டமும், மனஅழுத்தமும் அடைகிறார்களோ அதற்கேற்றாற்போல கருவில் உள்ள குழந்தை தன் இடதுகையை முகத்தை நோக்கி நகர்த்தும். இதன்மூலம் அம்மாவின் உணர்ச்சிகள் குழந்தையின் மீது ஆச்சரியமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அம்மாக்கள் எப்பொழுதும் வயிற்றில் குழந்தை இருக்கும்போது பதட்டமடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

உணவின் சுவை

சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும்போது அதன் சுவை உங்கள் உடலில் உள்ள அமோனியோடிக் திரவத்தால் உணரப்படும். பூண்டு, இஞ்சி, சோம்பு, மற்றும் இனிப்பு சுவை உள்ள பொருட்கள் அனைத்தும் அமோனியோடிக் அமிலத்தால் உணரப்படும். ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கைப்படி குழந்தைகள் நம் உலகத்திற்குள் நுழையும்போது அவர்களை நம் உணவுப்பழக்கத்திற்கு தயார்படுத்தும் இயற்கை நிகழ்வாக இது உள்ளது என்று நம்புகிறாரகள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உணர்ச்சிகள்

குழந்தைகள் தாயின் கருவில் சிரிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. கரு உருவான முப்பத்தி ஆறாவது வாரத்தில் இருந்து குழந்தைகள் தங்களுக்கென சில முகபாவங்களை வரையர்த்துக்கொள்வார்கள். தனக்கென தனிப்பட்ட அழகிய புன்னகை, மகிழ்ச்சியின்போது கண்களை மூடிக்கொள்ளுதல் போன்றவற்றை செய்வார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கண்களை திறப்பது

இருபத்தி எட்டாவது வாரத்தில் இருந்து உங்கள் குழந்தைகள் அடிக்கடி கண்களை திறக்க தொடங்குவார்கள். அவர்களால் அதிகமாக எதையும் பார்க்கமுடியாது, ஆனால் இரண்டாவது பருவத்தில் இருந்து அவர்கள் வெளிச்சத்திற்கு எதிர்வினை ஆற்றுவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பிரகாசமான ஒளி தாயின் வயிறு மூலம் குழந்தையை அடையலாம், இதனால் அவர்கள் நகர முயற்சிப்பார்கள். இந்த ஒளியால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

 

கதைகளை புரிந்துகொள்வது

ஆய்வுகளின் படி அம்மாக்கள் படிக்கும்போது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு குறையும், ஏனெனில் அந்த சமயங்களில் குழந்தைகள் ஜாலியாகதங்கள் அம்மா கூறும் கதைகளை கேட்க தொடங்குகிறார்கள். கருவில் இருக்கும்போது அவர்கள் கேட்கும் அனைத்து குரல்களையும் அவர்களால் கேட்க முடியும், அதன்பின்னர் அவர்கள் பிறந்தபின் தாங்கள் கீத குரலை அவர்களால் அடையாளம் காண முடியும்.

சுவாசித்தல்

உங்கள் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் பணியை உங்கள் தொப்புள்கொடி சரியாக செய்கிறது. இருப்பினும் உங்கள் குழந்தை எப்படி மூச்சுவிட வேண்டும் என்ற பயிற்சியை கருவிலேயே தொடங்கிவிடுவார்கள். கரு உருவான ஒன்பதாவது வாரத்திலேயே குழந்தைகள் மூச்சுவிடவும், அது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அறிந்துகொண்டு விடுவார்கள்.

அழுகை

ஆய்வுகளின் படி மூன்றாவது பருவகாலத்தில் கருவில் உள்ள குழந்தைகள் தாயின் வயிற்றின் மீது ஏற்படும் சத்தங்களுக்கு எதிர்வினையாக வாயைத்திறந்து அழத்தொடங்குவார்கள். மேலும் உதடுளை கீழ்நோக்கி நகர்த்துவார்கள்.

கை – வாய் ஒருங்கிணைப்பு

குழந்தைகள் தங்களின் மூன்றாவது பருவ காலத்தில் கருவில் இருக்கும்போது விரல் சப்ப தொடங்கிவிடுவார்கள். நாம் நினைப்பதை விட குழந்தைகள் கருவில் பலமடங்கு சுறுசுறுப்பாக இருப்பார்கள், பூமியில் பிறந்தவுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கான அனைத்து பயிற்சிகளையும் கருவிற்குள்ளேயே தொடங்கிவிடுவார்கள். ஸ்கேன் செய்து பார்க்கும்போது குழந்தைகள் விரல் சப்புவதை பார்ப்பது பெற்றோர்களுக்கு அதீத மகிழ்ச்சியை தரும்.

 

விக்கல்

விக்கல் குழந்தைகளின் முதல் பருவத்திலேயே தொடங்கிவிடும், ஆனால் அம்மாக்களால் இதனை உணர இயலாது. ஆனால் இரண்டாவது பருவகாலத்தில் அவர்களால் இதை உணரமுடியும். சில அம்மாக்களுக்கு அப்போது கூட உணர முடியாமல் போகலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button