சூப் வகைகள்

பாப்கார்ன் சூப்

என்னென்ன தேவை?

வெண்ணெய் – 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய குடைமிளகாய் – 2 டேபிள்
ஸ்பூன், பூண்டு – ஒரு பல்,
வேகவைத்த சோளம் – 1/2 கப்,
பால் – 1/2 கப், சோள மாவு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
சர்க்கரை – 1/4 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – தேவையான அளவு,
பாப்கார்ன் – 1 டேபிள்ஸ்பூன் (அலங்கரிக்க),
கொத்தமல்லி இலை – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய குடைமிளகாய், சோளம் மற்றும் தண்ணீர் சேர்த்து 10-12 நிமிடம் கொதிக்கவிடவும். வெந்தபின் அதில் பாலில் சோளமாவை கரைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும். பாப்கார்ன் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து, பிரெட் டோஸ்ட் உடன் பரிமாறவும்.

sl3988

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button