உதடு பராமரிப்பு

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடு அழகு பாதிக்கப்படுமா?

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்களென பாகுபாகின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்கவேண்டுமென்பது ஆசை.

இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ…

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், ‘வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, ‘சன்ஸ்கிரீன் லோஷன்’ தடவுங்கள்.

தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். இதனால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது. அவ்வாறு செய்தால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.
440d74e9 fe43 4117 9753 ddfd90ed8965 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button