சமையல் குறிப்புகள்

மஞ்சள் வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 4-5

Related Articles

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்

* புளி – 1 சிறிய துண்டு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகைonion turmeric chutney

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

Onion Turmeric Chutney Recipe In Tamil
* பின்பு அதில் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.

* அடுத்து, வதக்கியதை நன்கு குளிர வைத்து, பின் மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், மஞ்சள் வெங்காய சட்னி தயார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button