சரும பராமரிப்பு

சருமத்தை காக்கும் உணவுகள்

நம்மை சோதிக்கும் நோய்கள், உடல் பாதிப்புகள் பலவற்றுக்கு நம் உணவுமுறை குறைபாடே முக்கியக்காரணமாக இருக்கிறது. நாம் சந்திக்கும் சருமப்பிரச்சனைகளும் அதுதான் காரணம். உணவுவழி சத்துக்குறைபாடுகளுடன், சுத்தமின்மை, பரம்பரை காரணங்களாலும் சரும நோய்கள் ஏற்படலாம்.

தோலில் ஏற்படும் தேமல் போன்ற பிரச்சனைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத்தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சைசாறு, முட்டைகோஸ் இலை, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள சாறு, அவரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். இவற்றை தோல் மீதும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும்.

வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நைசின் சத்து குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், வைட்டமின் பி12 குறைபாட்டால் தோலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. உணவில் ரவை, சர்க்கரை அதிகம் சேர்த்து கொள்பவர்களுக்கும் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்னறன.

இரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க முழுத்தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள், காய்கள், பால் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

பொதுவாக காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுவது நம் தோல் இளமையை காத்து எப்போதும் புதுப்பொலிவோடு இருக்க வைக்கும். மேற்கண்ட சத்தான உணவுகளோடு வெயிலில் அலையாமல் இருப்பது, புகை, நெருப்பு போன்றவை இருக்கும் சூழலைத் தவிர்ப்பது, சுற்றுச்சூழல் மாசை முடிந்த அளவு கட்டுப்படுத்துவது போன்றவையும் நமது சருமத்தை சிறப்பாக வைக்கும். நம் உடலில் முக்கியமான பெரிய உறுப்பு சருமம் தான். அதை காப்பது நமது பொறுப்பு.

a8bfae14 ce3b 46a4 a969 e0e3d6ffd579 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button