பெண்கள் மருத்துவம்

மார்பக புற்றுநோய் வர காரணங்கள்!

உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மார்பக புற்றுநோய் பரவலான ஒன்றாகி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் பேர் புற்றுநோய் தொடர்பான விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மார்பக புற்றுநோய் தான் ஜாஸ்தி.

ஆபத்தான காரணிகள் :
வயது – நீங்கள் வயதான பெண்மணியாக இருந்தால் மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகம். பெதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம்தான் இந்நோய் சகஜமாக உள்ளது. இதில் சராசாரி வயது 63 ஆகும். பூப்பெய்துதல் – பருவம் அடையும் வயதுக்கும், மார்பக புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது சற்று தாமதமாக பூப்பெய்தும் பெண்ணைக் காட்டிலும் 12 வயதிலேயே பருவத்துக்கு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து மிக அதிகம். இதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹhர்மோன்கள் தான் காரணம். சின்ன வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு, மாத விலக்கு எண்ணிக்கை அதிகம்.

இத்தகைய சூழலில் ஈஸ்ட்ரோஜன் நீண்ட காலத்துக்கு வெளிப்படுவதால் புற்றுநோய் ஆபத்தும் அதிகாரிக்கிறது. குழந்தை பெறுதல் – பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 30 வயதை தாண்டி முதல் குழந்தையை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து 2 முதல் 3 மடங்கு அதிகம்.

அதே சமயம் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் காலம் தள்ளுவதும், ஆபத்தை இன்னும் அதிகாரிக்கும். குடும்ப பாரம்பாரியம் – தனிப்பட்ட முறையில் மார்பகங்கள் சம்பந்தமான நோய்களால் (புற்று அல்லாத) அவதிப்படும் பெண்களுக்கு, அந்த குறிப்பிட்ட மார்பகத்திலோ அல்லது வேறு மார்பகத்திலோ புற்றுநோய் வரக் கூடும்.

ஹார்மோன் சிகிச்சை – மெனோபாஸ் தாக்கத்தை குறைப்பதற்காக இன்று ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. இந்த சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்ஜெஸ்டீரான் கலந்து சிகிச்சை அளிக்கிறார்கள். இது மார்பக புற்றுநோய் ஆபத்தை 26 சதவீதம் அதிகாரிக்கும்.

இது தவிர சில குடும்பத்தில் பெண்களுக்கு, சின்ன வயதிலேயே மார்பக புற்றுநோய் அல்லது கருப்பை புற்றுநோய் காணப்படும். இதற்கு மேற்படி மரபணுக்கள் தான் காரணம். மரபியல் ரீதியான வேறு சில காரணங்களாலும் மார்பக புற்றுநோய் வரலாம்.

மதுபானம் – மது பழக்கமே இல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, தண்ணி அடிக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து சற்று அதிகம். உணவு மற்றும் உடற்பயிற்சி – கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகள் மற்றும் ரெகுலரான உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றும் பெண்கள் புற்றுநோய் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button