நகங்கள்

நகத்தைச் சுற்றி தோல் உரிவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

நகத்தைச் சுற்றி தோல் உரிவதற்கு முக்கிய காரணம் சரும வறட்சி, அதிகப்படியான வெயில், குளிர்ச்சியான காலநிலை, அடிக்கடி கைகளை கழுவுவது, கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது, வைட்டமின் குறைபாடு போன்றவைகள் தான்.

இது தற்காலிகமானதே. நகங்களைச் சுற்றி தோல் உரிந்தால் அதனை சரிசெய்ய சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

• கற்றாழை ஜெல்லை தினமும் பலமுறை நகங்களைச் சுற்றி தடவி வந்தால், விரைவில் குணமாவதோடு, நகங்களும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

• வாழைப்பழத்தினை மசித்து, அதில் சிறிது புளித்த தயிர், பொடித்த சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து, நகங்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவி, பின் தேங்காய் எண்ணெயை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும். இந்த முறையை பின்பற்றினாலும் கைவிரல்கள் மற்றும் நகங்களை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

• வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் கைகளை ஊற வைத்து, பின் வைட்டமின் ஈ நிறைந்த எண்ணெயான ஆலிவ் ஆயிலை தடவிக் கொண்டால், கைகளின் அழகு மேம்படும். நகங்களை சுற்றியுள்ள தோலை உரிவதும் தடுக்கப்படும். இதற்கு தினமும் இரு வேளை இம்முறையை செய்து வரவேண்டும்.

• தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை கைவிரல் நகங்களில் தடவி வந்தால், தோல் உரிவது தடுக்கப்படுவதோடு, நகங்களும் நன்கு பொலிவோடு அழகாக காணப்படும்.

ec5f740a f48e 40f4 83bc 34241dbe1bcd S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button