தலைமுடி சிகிச்சை

கூந்தல் ஈரப்பதத்துடன் இருக்கும்போதே எண்ணெய் தடவலாமா?

கேரளப் பெண்கள் இதை தங்களது வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். இப்படியாக தடவுவதன் மூலம் நாள் முழுவதும் கூந்தல் வழவழப்புடனே இருக்கும் என்பதால் செய்கின்றனர். உண்மையில் இப்படிச் செய்வது முற்றிலும் தவறானது. ஈரப்பதத்துடன் தேங்காய் எண்ணெய் தடவும்போது அந்த நீர் ஆவியாகாமல் தலையிலேயே தேங்கிவிடும். இதனால் நீர் கோர்த்து தலைவலி ஏற்படக் காரணமாக அமையும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தலைக்குக் குளிப்பதையே தவிர்த்து விட வேண்டும் என்று காது மூக்கு தொண்டை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே யாராக இருந்தாலும் குளித்து முடித்ததும் நன்கு தலையைத் துவட்டி காயவைத்த பிறகே தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும்.

Anushka Sharma

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button