சமையல் குறிப்புகள்

சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* நெய் – 2-3 டேபிள் ஸ்பூன்

Related Articles

* தயிர் – 1 டேபின் ஸ்பூன்

* நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்

* புளி – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

* மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

* கிராம்பு – 2

* வரமிளகாய் – 2

* காஷ்மீரி வரமிளகாய் – 6[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]paneer ghee roast 1625224674

செய்முறை:

* முதலில் பன்னீரை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் சுடுநீரில் புளியை போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் வரமிளகாயைத் தவிர அனைத்தையும் போட்டு, 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

* பின் வரமிளகாயை போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.

* பிறகு வறுத்த பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி நீரை ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த நெய்யில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து சில நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தயிரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் தயார்.

குறிப்பு:

* இந்த ரெசிபிக்கு எண்ணெயை பயன்படுத்தாதீர்கள். நெய் பயன்படுத்தினால் தான் சுவை அற்புதமாக இருக்கும்.

* உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.

* பன்னீரை நீண்ட நேரம் வேக வைத்து விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் ரப்பர் போன்று ஆகிவிடும்.

* வேண்டுமானால் பன்னீர் வறுக்காமல், மசாலாவில் போட்டு பிரட் ஊற வைத்தும் பயன்படுத்தலாம்.

* பன்னீரை வறுத்துப் பயன்பத்தினால், அது நல்ல சுவையைத் தரும்.

* உங்களுக்கு கிரேவியாக வேண்டுமானால், சற்று நீராக இருக்கும் போதே இறக்கிக் கொள்ளலாம். ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட நினைத்தால், நீரை வற்றவிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button