சரும பராமரிப்பு

கழுத்துப் பராமரிப்பு

ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது.
ஆனால் கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தை சுருக்கமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.

தினசரி கழுத்துப் பயிற்சி:

தலையை பின்புறம் 10 முறையும், முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.

கழுத்துப் பராமரிப்பு:

நடக்கும் போதும், உட்காரும் போதும் தலையை நிமிர்த்தி தோள்பட்டையை பின்பக்கம் தள்ளிய படி இருக்கவும்.

உலர்ந்த காற்று மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்ளவும். நீச்சல் பயிற்சிக்குப் பின் நல்ல நீரில் குளித்து உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாக்கவும்.

கழுத்துப் பகுதியை இறுக்கமாக்கும் கிரீம் உபயோகிக்கலாம். கிரீமை மேல் நோக்கி தேய்க்க வேண்டும். முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கழுத்திற்கும் தர வேண்டும். கழுத்திற்கு மாஸ்க், மஸாஜ் ஆகியவை மிகவும் முக்கியம்.
Nice neck e1456943419572

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button