கை பராமரிப்பு

கை, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க‍ டிப்ஸ்

முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் மெனக்கெடுகிறோம். ஆனால், அமர்வது, எழுவது, படுப்பது போன்ற அன்றாட செயல்களின் போது, கை மூட்டு, கால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறோம்.

இதனால், செல்களுக்கு முறையான நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இப்பகுதிகள் கறுப்பாக மாறி விடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீர்செய்ய முடியும். இரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும்.

தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும். ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இறந்த செல்களை உடனடியாக அகற்றும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சளுடன், பசும்பால் சேர்த்து, மூட்டுப் பகுதியில் தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் காயவிட வேண்டும். பின்னர், சோப் பயன்படுத்தி, மூட்டு பகுதியைக் கழுவ வேண்டும். தினமும் இதனைச் செய்து வந்தாலே, சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.

கற்றாழை ஜெல் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

கடலை மாவு, தயிர் சம அளவு கலந்து, மூட்டுப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவலாம். கடலை மாவுக்குப் பதில் பாதாம் பருப்பை அரைத்தும் பயன்படுத்தலாம்.

ரோஜா இதழை காயவைத்துப் பொடித்துக் கொள்ளவும். இதனுடன், முல்தானிமட்டிப்பொடி சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டுக் கலக்கி பேஸ்ட் ஆக்கவும். இதைக் கறுப்புத் திட்டுகள் இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், மூட்டுகள் பளபளப்பாகும். c6580438 6717 42e7 a595 006d598d33a1 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button