முகப்பரு

பிம்பிள் பிரச்சனை… சிம்பிள் தீர்வுகள்!

பருவப் பெண்களின் பெரிய பிரச்னை… பரு! அதற்கான மருத்துவக் காரணம் மற்றும் தீர்வுபெறும் வழிகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் டாக்டர் சுகந்தன்.

ஏன் முகப்பருக்கள்?

டீன் வயதினருக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், முகத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அடைக்கப்பட்டு, அந்த இடத்தில் பாக்டீரியா உருவாகும். பின் இந்த பாக்டீரியா வளர்ச்சி அடைந்து, முகப்பருக்களாக மாறும். 11 வயதில் தொடங்கும் முகப்பருக்கள், 25 வயதுவரை நீடிக்கும். ஆண்களுக்கு, இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, 18 வயதில் அதிக அளவில் பருக்கள் தோன்றும்.

பருக்கள் உள்ளவர்கள் பின்பற்ற…

முகத்துக்கு அதிகமாக அழகு சாதனப் பொருட்கள் (காஸ்மெடிக்ஸ்) பயன்படுத்து வதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, எண்ணெய் சார்ந்த க்ரீம்களை (ஆயில் பேஸ்டு) தவிர்க்க வேண்டும்.

கல்ச்சுரல்ஸ், வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சி களின்போது காஸ்மெடிக் க்ரீம்கள் பயன்படுத்தினாலும், வீடு திரும்பியவுடன் முதல் வேலையாக முகத்தைக் கழுவ வேண்டும்.

அடிக்கடி சோப் அல்லது ஃபேஸ்வாஷ் கொண்டு முகத்தைக் கழுவிக்கொண்டே இருப்பதால், பருக்கள் போகாது. எனவே, அதைத் தவிர்க்கவும்.

நமது சருமத்தின் pH அளவு 5.5. அதற்கு ஏற்ற சோப்பைத் தேர்வுசெய்து, தினமும் இருமுறை முகத்தைக் கழுவினால் போதுமானது.

வேம்பு, மஞ்சள் போன்ற ‘ஆன்டி பாக்டீரியல்’ குணம் கொண்ட தாவரங்களாலான சோப் மற்றும் ஃபேஸ்வாஷ் பரிந்துரைக்க ஏற்றது. ஆனால், அவற்றிலும் pH அளவு 5.5 அல்லது அதையொட்டி இருக்க வேண்டும்.

முல்தானிமட்டி, எண் ணெய்ச் சுரப்பை கட்டுப்படுத்தும். ஆனால், அதை அதிகளவு பயன்படுத்தக்கூடாது.

அதிகமாக இனிப்புகளை உண்பதும் முகப்பருக்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள். எனவே, இனிப்பு களைத் தவிர்க்கலாம் அல் லது சர்க்கரையின் அளவு குறைவாக உள்ள இனிப்புகளை உண்ணலாம்.

தண்ணீர் நிறையக் குடிப் பதன் மூலமும் முகப்பருக்களை கட்டுப்படுத்தலாம்.

முக்கியமான விஷயம்… பருக்கள், கரும்புள்ளிகள், கட்டிகளை நகத்தால் கிள்ளவோ நீக்கவோ கூடாது. கட்டிகள் சிதைவடைந்தால், அவை முகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
p118a
சிசிச்சை

கரும்புள்ளிகள் மற்றும் கட்டிகளை நீக்க பிரத்யேக சிகிச்சை முறைகள் உள்ளன. முகப்பருக்களுக்கு ‘பீல்’ எனப்படும் சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. வடுக்கள் உண்டானால், லேசர் சிகிச்சை மூலம் அவற்றை 70% மறையச் செய்யலாம்.

வளர்ந்துவரும் மருத்துவ உலகில் எல்லா வகையான முகப்பருக்களுக்கும் சிகிச்சை சுலபமாகிவிட்டது. ஆனாலும், ஆரம்ப கட்டத்திலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், சங்கடங்களைத் தவிர்க்கலாம்!

பிம்பிள் பிரச்னையை இனி சரிசெய்யலாம்… எளிதாக!
p118b

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button