மருத்துவ குறிப்பு

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது தவறா?

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது சரியா? தவறா? பெரும்பாலும் அனைவரும் சரி என்று தான் கூறுவார்கள். ஏனெனில், அவ்விடத்தில் முடி அதிகமாக வளர்ந்தால் வியர்வை சுரந்து பாக்டீரியாக்கள் அதிகம் பரவும் என சிலர் பதிலளிப்பதும் உண்டு.

ஆனால், இல்லை பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது தவறு. தொடர்ந்து அவ்விடத்தில் சேவிங் செய்துக் கொண்டே இருப்பதால் தான் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு, புண், நச்சுக்கிருமி தொற்றுகள் போன்றவை ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்….

வைரஸ் நோய் தொற்று

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் வைரஸ் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறதாம். Molluscum contagiosum எனப்படும் சரும தொற்று இதனால் மிக எளிதாக பரவுகிறதாம். ஆய்வாளர்கள், “இதனால் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு போன்றவை அதிகம் தோன்றுகிறது” என கூறுகின்றனர்.

பாதுகாப்பு

பிறப்புறுப்பு பகுதியில் முடியை அகற்றாமல் இருப்பதால் தூசு, பாக்டீரியா போன்ற அயல் துகள் பொருட்கள் உடலுக்குள் செல்லாமல் தடுத்து பாதுகாக்கிறது. நீங்கள் பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் கிருமி தொற்றுகள் அண்டும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல் வெப்பநிலை

பிறப்புறுப்பு முடி வேர்களில் சரும மெழுகு சுரப்பி (sebaceous gland) இருக்கிறது. இதில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வெளிப்படும். இது சருமத்தில் ஒன்றி ஆவியாகி சருமம் அதிக சூடாகாமல் தடுக்கிறது. மேலும் இதனால் உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் பாதுகாக்க முடிகிறது.

பால்வினை தொற்று

மேலும் பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் பால்வினை தொற்றுகளால் எளிதாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

பாலுண்ணி / மருக்கள்

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் பாலுண்ணி / மருக்கள் உண்டாகும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறதாம். பெரும்பாலும் இது சரும நிறத்தில் தோன்றுவதால் வெளிப்படையாக தெரிய வாய்ப்புகள் குறைவு.

பாலுண்ணி / மருக்கள்

ஷேவிங் செய்வதால் இவை உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஷேவிங் செய்யாமல் இருப்பதால் இதை முழுமையாக குறைத்துவிட முடியாது என்றும் சரும நிபுணர்கள் கூறுகிறார்கள். சருமத்தோடு பாலுண்ணி / மருக்கள் ஏற்படும் தொடர்பினை குறைக்க தான் உதவும்.

சரும பிரச்சனைகள்

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் எரிச்சல் மற்றும் கொப்பளம் அல்லது நுண்ணிய இரத்த கட்டிகள் உண்டாகலாம். தொடர்ந்து பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் சருமம் மிருதுவாக இருக்கும் என சிலர் எண்ணுவதுண்டு ஆனால், இது நுண்ணுயிர் நோய்க்கிருமிகள் உண்டாவதற்கு காரணியாக இருக்கிறதாம்.

ட்ரிம்

அளவிற்கு அதிகமாக பிறப்புறுப்பு பகுதியில் முடி வளர்ந்தால் ட்ரிம் செய்துக் கொள்ளலாம். ஆனால், முழுமையாக ஷேவிங் செய்து முடிகளை அகற்ற வேண்டாம். இதனால் தான் சரும கிருமி தொற்றுகள் எளிதாக அவ்விடத்தில் பரவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

21 1458536613 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button