சரும பராமரிப்பு

பார்லர் வேண்டாம்: வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்

எல்லோருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால், அதற்காக மெனக்கெடத்தான் பலருக்கும் நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. மாதம் தவறாமல் பியூட்டி பார்லர் போய் அழகை மேம்படுத்திக் கொள்பவர்கள் மிகச் சிலரே… மற்றவர்கள்தினம் வெறும் பத்தே நிமிடங்களை ஒதுக்கினாலே, சருமத்தை அழகாக, இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார் பிரபல அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத்.

சருமத்தைப் பாதுகாக்க தினசரி செய்ய வேண்டியவற்றையும், வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய ஃபேஷியல் பற்றியும் விளக்குகிறார் அவர்.
காலைல குளிக்கிறதுக்கு முன்னாடியும், ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னாடியும் சருமத்தை சுத்தப்படுத்தணும். தரமான கிளென்சர் வாங்கி, முகத்துல தடவி, பஞ்சால துடைச்சு எடுக்கணும்.

அடுத்து டோனர். இதை சருமத்துக்கான டானிக்னு சொல்லலாம். கைகள்ல கொஞ்சமா டோனர் எடுத்து, முகத்துல அப்படியே தடவணும். வெள்ளரிக்காய் கலந்த டோனர் ரொம்பவே நல்லது.மூணாவதா ஸ்க்ரப். பாதாம் கலந்த ஸ்க்ரப் வாங்கி, முகத்துல தடவி, வட்ட வடிவத்துல தேய்ச்சு விட்டு, வெந்நீர்ல நனைச்சுப் பிழிஞ்ச டவலால துடைச்செடுக்கணும்.

இது சருமத்துல உள்ள பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸை தளர்த்தி விடும். அப்படியே துடைச்செடுத்தாலே முகம் சுத்தமாயிடும்.
அடுத்ததா மசாஜ். கற்றாழை ஜெல் எல்லாக் கடைகள்லயும் கிடைக்குது. எல்லாவிதமான சருமத்துக்கும் பொருந்தும். அதுல கொஞ்சமா எடுத்து, முகத்துல தடவி, மேல் நோக்கி மென்மையா மசாஜ் பண்ணலாம்.

மசாஜ் முடிஞ்சதும், முகத்தை சுத்தமா துடைச்செடுத்துட்டு, பேக் போடலாம். மார்க்கெட்ல விதம் விதமான பேக் கிடைக்குது. பால் கலந்த மில்க் பேக் எல்லா சருமத்துக்கும் ஏற்றது. பேக் கிடைக்காதவங்க, சுத்தமான சந்தன பவுடரை உபயோகிக்கலாம். வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே, முகம் பொலிவா இருக்கும்” என்கிற ஹசீனா, சரும நிறத்தைக் கூட்டும், ‘ஸ்கின் லைட்டனிங்’ சிகிச்சையையும் வீட்டிலேயே செய்து கொள்வது எப்படி என விளக்குகிறார்.

டூ வீலர்ல போறவங்க, பஸ்ல போறவங்கனு எல்லாரும் இன்னிக்கு தூசி, மாசுகளோட பாதிப்புக்குள்ளாகறாங்க. முன்னல்லாம் நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடியே அழகு சிகிச்சைக்கு மணப்பெண்கள் தயாராவாங்க. இன்னிக்கு அவங்களுக்கும் நேரம் இருக்கிறதில்லை. எல்லாருக்கும் இன்ஸ்டன்ட்டா ஒரு அழகு தேவைப்படுது. அவங்களுக்கானதுதான் இந்த ஸ்கின் லைட்டனிங் சிகிச்சை.

இந்த சிகிச்சைக்கான செட் அப்படியே கிடைக்குது. முதல்ல அதுல உள்ள கிளென்சரை முகத்துல வட்டமா தடவி, பஞ்சால துடைச்செடுக்கணும். அடுத்து ஸ்கின் டானிக் தடவிட்டு, கடல்பாசி கலந்த ஸ்க்ரப் உபயோகிக்கணும். ஒரு நிமிஷம் கழிச்சு, முகத்தைத் துடைச்செடுத்துட்டு, கிரீம் வச்சு மசாஜ் பண்ணணும். கடைசியா பீல் மாஸ்க். அதை அப்படியே முகத்துல தடவிட்டு, 10 நிமிஷம் கழிச்சு உரிச்செடுத்தா, முகம் பளீர்னு மாறியிருக்கும்.

கண்களுக்கடியில கரு வளையம் அதிகமா இருந்தா, குங்குமப் பூ கலந்த மாஸ்க் உபயோகிக்கலாம். பளபளப்பா தெரியணும்னு விரும்பறவங்க கோல்ட் ஜெல் உபயோகிக்சு, பத்து நிமிஷம் விட்டுத் துடைச்சா போதும்.இதெல்லாம் வீட்லயே சுலபமா செய்யக் கூடிய சிகிச்சைகள்னாலும், முதல் முறை ஒரு அழகுக் கலை நிபுணர்கிட்ட உங்க சருமத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு செய்யறது பாதுகாப்பானது என்கிறார்.
ld1009

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button