மருத்துவ குறிப்பு

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்!!

ஈக்கள், கொசு, கரப்பான்பூச்சி, மூட்டை பூச்சி, வண்டு சிண்டு என வீட்டில் நம்மோடு பலவகை பூச்சிகளும் குடித்தனம் நடத்தி வரும். சில பூச்சிகள் வீட்டில் இருப்பதும் தெரியாது, போவதும் தெரியாது, வண்டுகளை போல. ஆனால், சிலவன நம்மை நிம்மதியாக ஓரிடத்தில் உட்கார விடாது, 10 நிமிடங்கள் கூட தூங்கவிடாது தொல்லை செய்துக்கொண்டே இருக்கும், மூட்டை பூச்சிகளை போல.

இவற்றை எல்லாம் துரத்த வெளியில் கடையில் இருந்து இரசாயன மருந்துகளை வாங்கி கொண்டு வந்து அடித்தால், நாம் தான் ஓர் நாள் வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டுமே தவிர, அவை வீட்டில் ஜம்மென்று இருக்கும்.

வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் இருக்கும் போது ஏன் வீணாக சிரமப்பட வேண்டும்….

கொசுக்களுக்கு பூண்டு

கொசுவினை விரட்ட சிறந்த மருந்து உங்கள் சமயக்கட்டில் இருக்கும் பூண்டு. நான்கைந்து பூண்டு விழுதுகளை எடுத்து நசுக்கி, சுடுநீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரை உங்கள் வீடு முழுக்க தெளித்தாலே போதும், கொசு தொல்லை உங்கள் வீட்டில் இருக்காது. பூண்டின் வாசம் நன்கு இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

எறும்புகளுக்கு வெள்ளை வினிகர்

கில்லி போல, வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும் சரி, இந்த எறும்பு எல்லா காலத்திலும் வீட்டை சுற்றி இருக்கும். நீங்கள் அடுத்த முறை உங்கள் வீட்டில் எறும்பை கண்டால் செய்ய வேண்டியது, வெள்ளை வினிகரை எறும்புகள் இருக்கும் இடத்தில தெளித்தல். இது எறும்புகளை தடுக்கும் ஓர் சிறந்த இயற்கை பொருள் ஆகும்.

கரப்பான்பூச்சி

போரிக் பவுடர் கழிவறையிலிருந்து, சமையலறை வரை எல்லா பக்கமும் சுத்தி சுத்தி வந்து தொல்லை கொடுப்பது இந்த கரப்பான்பூச்சி. கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில வைத்துவிட்டால், கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக அழிந்துவிடும்.

சிலந்திகளுக்கு எலுமிச்சை

தோல் மழை காலங்களில் இந்த சிலந்தியின் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கும். எலுமிச்சை, சாத்துக்கொடி, ஆரஞ்சு போன்றவற்றின் தோல்களை சிலந்தி இருக்கும் இடத்தில தேய்த்தாலே, சிலந்தி வராது, முற்றிலுமாக அழிந்துவிடும்.

ஈக்களுக்கு கற்பூரம்

நிறைய பேருக்கு தெரியாத ஒன்று, கற்பூரம் ஈக்களை அண்டவிடாது என்பது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஓர் கிண்ணத்தில் கர்பூரங்களை போட்டு வைத்துவிட்டால், ஈக்களின் தொல்லையே இருக்காது.
17 1434542613 5fivenaturalwaystokeepyourhomepest freethisseason

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button