அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகு

ld6261. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.

2. 35 வயதிற்குப் பிறகு மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வந்தால், முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல், 50 வயதில் 30 வயதுப் பெண்மணிப்போல் தோற்றம் அளிப்பீர்கள்.

3. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வாக்ஸிங் செய்வதால் முதலில் கை, கால்களில் உள்ள முடி குறைவாக வளரும். பின்பு நாளடைவில் வளர்வது நின்றுவிடும்.

4. தினமும் அரை மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தாட்சி.

5. ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் நீர் அருந்தினால், உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாகும், சருமம் மினுமினுக்கும்.

வேப்பமர இலைகளையும், புதினா இலைகளையும், துளசி இலைகளையும் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

கரிகசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகியவற்றை அரைத்து, காயவைத்து, தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தலைமுடியில் தடவிவந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

சிகைக்காய் அரைக்கும்போது, கொஞ்சம் பாசிப்பருப்பு, வெந்தயம், பூந்திக்கொட்டை, பச்சரிசி, காயவைத்த செம்பருத்தி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உபயோகித்தால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்; கருமையாகவும் வளரும்.

இரவு படுக்கப் போகுமுன் கண்களைச் சுற்றியும் உள்ளங்கால்களிலும் விளக்கெண்ணெய் தடவிவந்தால், உடலின் சூடு குறைந்து கண்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரியும்.

Related posts

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan

பெண்கள் இதை அக்குளில் தடவினால், கருமையும் வராது ஷேவ் பண்ண அவசியம் இருக்காது

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்

nathan

அக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan

பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது? இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

nathan

பெண்கள் கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையத்தை போக்கும் அற்புத குறிப்புகள்…!!

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

உங்களுக்கு தெரியுமா உதட்டில் உள்ள சுருக்கங்களை நீக்குவது எப்படி ??

nathan