செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம் chettinad samayal kurippu

அசைவ பிரியர்களுக்கு இந்த செட்டிநாடு உப்பு கறி மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்
சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 20 பற்கள்
இஞ்சி – 1 இன்ச்
குண்டு வரமிளகாய் – 10
தக்காளி – 1
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு, கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

* இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிகொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.

* மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கி, பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு குக்கரை திறந்து, மட்டனை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!201606091434584942 how to make chettinad uppu kari SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button