சரும பராமரிப்பு

எண்ணெய் சருமமா? முகப்பருவா? வாரம் இருமுறை ஹெர்பல் ஆவி பிடியுங்கள்!

வெயில் காலத்தில் சருமத்தில் எண்ணெய் படிவதை தவிர்க்க இயலாது. கூடவே முகப்பரு பிரச்சனையும் சேர்ந்துக் கொள்ளும். வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடித்தால் சருமத்தை பாதுகாக்கமுடியும்.

தேவையானவை: 1.மஞ்சள் (கூடுமானவரை மஞ்சளை மெஷினில் அரைத்து உபயோகப்படுத்துவது நல்லது. கடையில் விற்பதில் கெமிக்கல்ஸ் கலந்திருக்கும்) 2.பட்டை 3.க்ரீன் டீ 4.நீர்

herbalsteamforoilyskinandpimples1 27 1461750939

க்ரீன் டீ சருமத்திற்கு நிறைய மகத்துவத்தை தரவல்லது. சருமத்தை மிருதுவாக்கும். சூரியக்கதிர்களின் பாதிப்பினிலிருந்து பாதுகாக்கும். இது பாலிஃபீனால் அதிகம் கொண்டிருப்பதால், சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது. மஞ்சள் ஆன்டி-செப்டிக், தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

அது முகப்பருவிற்கு முதல் எதிரியாகும். பட்டை தோலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதில் அருமையாக பணி புரிகிறது.இது ஆழமாக தோலினுள் ஊடுருவுகிறது.முகத் துவாரங்களில் இருக்கும் அழுக்குகளை அகற்றி மற்ற மூலிகைகள் உள்ளே செல்ல அனுமதிக்கிறது.

ples3 27 1461750971

செய்முறை: 1.

முதலில் முகத்தில் க்ளென்ஸர் கொண்டு சுத்தம் செய்யவும். மேக் அப், தோலின் மேலுள்ள அழுக்கு ஆகியவற்றை களைந்து விடுவது அவசியம். 2.பிறகு சுத்தமான நீரினை நன்றாக கொதிக்க விடவும். 3.அடுப்பை அணைத்த பிறகு, மஞ்சள்,க்ரீன் டீ,பட்டை ஆகியவற்றை போடவும்.ஒரு ஸ்பூனை கொண்டு நன்றாக கலந்து விடவும். 4.இப்போது மஞ்சள் நிறம் சற்று மாறியிருக்கும். அப்படியென்றால், நாம் போட்டிருக்கும் ஹெர்பல் நீரில் கலந்து நன்றாக வேலை செய்கிறது என அர்த்தம். 5.ஒரு காற்று பூகாத கெட்டியான டவலைக் கொண்டு முகத்தினை முழுவதும் மூடி ஆவி பிடிக்க வேண்டும்.

இதனால் முகத்திலுள்ள துளைகள் நன்றாக திறந்து, மூலிகைகள் அனைத்தும் உள்ளே செல்லும். சுமார் 20 நிமிடங்கள் ஆவி பிடிக்க சருமம் உள்ளவர்கள் 10 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. அதன் பின் ரிலாக்ஸாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button