ஆண்களுக்கு

ஆண்களே! இளமையாக இருக்க வேண்டுமா..? : இத கொஞ்சம் படிங்க…!

அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

அப்படி இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், மனதை மற்றும் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அன்றாடம் உடற்பயிற்சி செய்து வருவதுடன், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.

அதுமட்மின்றி, முறையான உடல் மற்றும் சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

மேலும் மன அழுத்தத்தை தவிர்த்து, எப்போதும் மகிழ்ச்சியுடன் கவலையை மறந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

கீழே கொடுத்துள்ளவற்றை படித்து மனதில் கொண்டு அதன்படி நடந்து வாருங்கள். நிச்சயம் நீங்கள் நீண்ட நாட்கள் இளமையுடனேயே காணப்படுவீர்கள்.

1.ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். சரும செல்கள் பாதிப்படையாமல் இருந்தால், முதுமைத் தோற்றம் தள்ளிப் போவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

அதற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வந்தால், சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.

2.சன் ஸ்க்ரீன்
சருமத்தில் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் பட்டால், சருமத்தின் அழகு பாதிக்கப்படுவதோடு, சரும செல்கள் பாதிப்படைந்து அதனால் சரும புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

ஆகவே இத்தகைய நிலையைத் தவிர்க்க வெளியே செல்லும் போது, சன் ஸ்க்ரீன் லோசனை சருமத்திற்கு தவறாமல் பயன்படுத்த வேண்டும்

குறிப்பாக கோடைக்காலத்தில் சரும செல்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், ஆண்கள் இக்காலத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

3.ஸ்கரப்
ஆண்களும் தவறாமல் சருமத்திற்கு ஸ்கரப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடும் இளமையாகவும் இருக்கும்.

ஆகவே ஆண்களே உடனே சருமத்திற்கு பொருத்தமான ஸ்கரப்பை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

4.மாய்ஸ்சுரைசர்
சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்பட்டால், சருமத்தின் மென்மைத்தன்மை நீங்குவதோடு, சருமத்தில் சுருக்கங்களும் காணப்படும்.

ஆகவே தினமும் தவறாமல் சருமத்திற்கு ஆண்களும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

அதிலும் வைட்டமின் ஈ நிறைந்த மாய்ஸ்சுரைசர் க்ரீமை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.

5.ஹேர் ஸ்டைல்
ஆண்களை இளமையுடன் வெளிக்காட்டுவதில் ஹேர் ஸ்டைரும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

பொதுவாக ஆண்கள் இளமையுடன் காட்சியளிக்க ஹேர் கட் செய்து, ஷேவிங் செய்து கொண்டால், இளமையுடன் காட்சியளிப்பீர்கள்.

இருப்பினும் சரியான ஹேர் ஸ்டைலுடன், தாடி மற்றும் மீசையை ட்ரிம் செய்து இருந்தாலும் ஆண்கள் அழகாக காணப்படுவார்கள்.

6.போதிய தண்ணீர்
தினமும் 6-8 டம்ளர் தண்ணீரைக் குடித்து வந்தால், சருமத்தில் நீர்ச்சத்து இருப்பதோடு, சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.

7.சரியான அளவு தூக்கம்
தற்போதைய காலத்தில் ஆண்கள் சரியாக தூங்குவதில்லை. அப்படி தினமும் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், வயதான தோற்றத்துடன் தான் காணப்பட நேரிடும்.

ஆகவே தினமும் தவறாமல 7-8 மணிநேரம் தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

8.உடற்பயிற்சி
தினமும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு, உடற்பயிற்சியையும் தவறாமல் பின்பற்றி வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், உடலுறுப்புக்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் இருக்கும்.

9.வயதாவதைத் தடுக்கும்
உணவுகள் உணவுகளில் முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுத்து, சருமம் தளர்ச்சி அடைவதைத் தடுக்கும்.

மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த உணவுகளான செர்ரி, பெர்ரிப் பழங்கள், தக்காளி, பூண்டு போன்றவற்றை உட்கொண்டு வந்தால், சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காணப்படும்

10.சரும பராமரிப்பு
* தினமும் தக்காளி சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

* கற்றாழை வீட்டில் இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் நீங்கும்.

* வெள்ளரிக்காயை தினமும் கண்களின் மேல் 10 நிமிடம் வைத்து வந்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன இருக்கும்.

* ஆலிவ் ஆயிலைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.boy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button