கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

உடல் உஷ்ணம் நீக்க கேரட் தக்காளி சூப் பொடுகுதொல்லை நீங்க

Dandruff-treatments-at-Paly-Salon-690x340பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வசம்பை நன்கு பவுடராக்கி தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன் தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

தலைக்கு குளிக்கும்போது கடைசியாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள் வெந்தயப்பொடி தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு தயிர் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கூந்தல் உதிர்வுக்கான காரணமும் – செய்யக்கூடாதவையும்

nathan

முடி வளர…. பாட்டி மருத்துவம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

nathan

முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் ஹேர் டோனர் எப்படி வீட்டில் செய்வது? ஓர் எளிய செய்முறை !!

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் ?

nathan

ஆண்களே! தலைமுடி அதிகம் கொட்டி சொட்டை விழுவது போல் உள்ளதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

nathan

கூந்தல் கருமையான நிறத்துடன் செழித்து வளர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

nathan

கூந்தலைப் பராமரிக்க அருமையான வழிகள்!

nathan