ஃபேஷன்

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

பெண்கள் விரும்பும் ஹேண்ட்பேக் என்பதில் லெதர் ஹேண்ட்பேக் தான் முதலிடம் பிடிக்கிறது.

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்
பெண்கள் அனைவரும் வெளியே செல்லும் தங்கள் உடன் ஓர் ஹேண்ட்பேக் எடுத்து செல்வது வழக்கம். ஹேண்ட்பேக் என்பதில் பலவகைகள் உள்ளன. இன்றைய நாளில் சாதாரன ஹேண்ட்பேக் முதல் விலை உயர்ந்த வைரம் பதித்த இளட்ச் வரை அனைத்தும் மங்கையர் கரங்களில் உலா வருகின்றன.

ஹேண்ட்பேக் துணி, லெதர், மணி, கற்கள் பதித்தது, உல்லன் நூல், பிளாஸ்டிக் வயர் பிண்ணப்பட்டது வரை பல விதமான பொருட்களில் உருவாகிறது. அதிகம் பெண்கள் விரும்பும் ஹேண்ட்பேக் என்பதில் லெதர் ஹேண்ட்பேக் தான் முதலிடம் பிடிக்கிறது. ஹேண்ட்பேக் உருவாகும் வடிவமைப்பு மற்றும் அளவீடு என்பது பயன்படுத்தும் சூழலுக்கும், உபயோகத்திற்கும் ஏற்றவாறு உள்ளது.

ஹேண்ட்பேக் உருவாக்கத்தில் அதற்கென தனிப்பட்ட பெயர் கொண்டது அளவு, கைப்பிடி அமைப்பு, மடிப்பு மற்றும் திறப்பு வகைகளுக்கு ஏற்ப உருவாகின்றன. உலகளவில் ஹேண்ட்பேக் வகைகள் என்பது பதினெட்டு நவீன வடிவங்களில் அடங்கி விடுகிறது.

நாம் ஹேண்ட்பேக் வாங்க செல்லும் போது நமது உபயோகம் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்க அதன் பிரத்யோக பெயர்களையும், சிறப்பு அம்சங்களை அறிவது அவசியம்.

ஹோனே ஹேண்ட் பேக் :

இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற ஹேண்ட்பேக். தோள் பட்டையில் இலகுவாகு அமர்ந்து நகராமல் பிடித்து கொள்ளும் கைப்பிடி கொண்டது. ஹேண்ட்பேக்-யின் கைப்பிடி மற்றும் பேக் பகுதி இரண்டும் தனித்தனியாக தெரியாதப்படி சற்று வட்ட வடிவில் உள்ள ஹேண்ட்பேக். சற்று பெரிய வடிவில் உள்ள ஹேண்ட்பேக் என்பதுடன் மூலம் கீ பகுதி மிக அருகில் இருக்கும்.

பேகிட் வகை :

பேகிட் என்பது குறுகிய கைப்பிடியுடன் கூடியது. இதன் பேக் அமைப்பு பக்கவாட்டு பகுதிகள் நீண்டதாவும், மேல், கீழ் பகுதிகள் அளவு குறைந்தவாறும் இருக்கும். செவ்வக வடிவில் கீழ் பகுதி இருபுறமும் வளைந்தவாறு உள்ள இந்த பேக் கச்சிதமான வடிவமைப்பு கொண்டது.

மினாடர் என்ற கையடக்க ஹேண்ட்பேக் :

மணிகள் மற்றும் கற்கள் மேற்புறம் பதித்த கையடக்க ஹேண்ட்பேக். மாலை நேர விழாக்களுக்கு செல்லும்போது எடுத்து செல்ல ஏற்றது. ஹார்ட் கேஸ் டைப்பில் மூடக்கூடிய இந்த ஹேண்ட்பேக் அதன் மணி மற்றும் கற்கள் வகையினை பொருத்து விலை மாறுபடும்.

பேரல் ஹேண்ட்பேக் :

பேரல் என்ற ஹேண்ட்பேக் உருளைவடிவில் இருக்கும். அதனாலேயே இதனை பேரல் என்று அழைத்தனர். மற்ற ஹேண்ட்பேக்களை விட வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஹேண்ட்பேக் என்பதால் தனித்து தெரியும்.

மணிபர்ஸ் போன்ற பிரேம் :

சற்று கடினமான விறைப்பான ஹேண்ட்பேக். மணிபர்ஸ் போன்ற வடிவமைப்பில் உருவாகும் இந்த ஹேண்ட்பேக் ஓப்பன் டைப் உலோக மூடி வகையிலானது. அழகிய நீள சதுர அமைப்பில் உள்ள இந்த ஹேண்ட்பேக் பெண்கள் விரும்பி அணியும் ஹேண்ட்பேக் தான்.

கில்லட்டு வகை ஹேண்ட்பேக் :

செவ்வக வடிவில் மடிப்பு திறவு கொண்ட இந்த ஹேண்ட்பேக் அலுவலக பெண்மணிகளுக்கு ஏற்றது. அத்துடன் இதன் ஓரப்பகுதிகள் மேற்புற தையல் கொண்ட அமைப்பாக உள்ளது. இதன் கைப்பிடிகள் பெரும்பாலும் செயின் அமைப்பில் தான் இருக்கும்.

பிளாப் ஹேண்ட்பேக் :

பக்கவாட்டில் நீண்ட வகையிலான இந்த ஹேண்ட்பேக் மேற்பகுதி இருபுறமும் வளைந்த வடிவில் மடித்து மூடக்கூடிய பிரஸ் டைப் கொண்ட ஹேண்ட்பேக்.

கிளட்ச் ஹேண்ட்பேக் :

இன்றைய ஆடம்பர வகை ஹேண்ட்பேக்களில் முதலிடம் பிடிப்பது கிளட்ச். கையில் கச்சிதமாய் அமர்ந்து ஓர் கடிதம் போல் தோற்றமளிக்கும் இந்த ஹேண்ட்பேக் பல விதமான அமைப்பில் உருவாக்கி தரப்படுகிறது. இதன் மேற்புறம் செய்யப்படும் அழகு வேலைப்பாடுக்கு ஏற்ப இதன் விலையும், தரமும் உள்ளது. மாலை நேர விழா, ஹோட்டல் மற்றும் ஆடம்பர விழாவிற்கு எடுத்து செல்ல ஏற்றது கிளட்ச்.

ரிஸ்ட் லெட் ஹேண்ட்பேக் :

ஹேண்ட்பேக் ஒரு முனையில் நமது கைமூட்டில் மாட்டகூடிய கைப்பிடி கொண்டது. கிளட்ச் வடிவில் உள்ளதுதான் என்றாலும் ஒரு கையில் மாட்டி கொண்டு எடுத்து செல்ல வசதியானது.

இதுபோல் டோட், பக்கெட், சாட்செல், டாக்டர், சேடல், மெசன்ஜர், பேர்பேக் எனப் பலவகை ஹேண்ட்பேக் வகைகள் உள்ளன. இவற்றில் நமது தேவை எதுவோ அதன் பெயர் வகையை கூறி ஹேண்ட் பேக் வாங்கிக் கொள்ளலாம்.201607230739393126 variety design handbags SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button