மருத்துவ குறிப்பு

பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை

பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம்.

பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
நம் நாட்டு மக்களை மிக அதிகமாக தாக்கும் நோய் ரத்த சோகை நோய் தான். இது மொத்த பெண்கள் மக்கள் தொகையில் 50 சதவீத பேரும், குழந்தைகள் எண்ணிக்கையில் 75 சதவீதம் பேரும் இந்த நோயால் பாதிப்படைந்துள்ளார்கள்.

ரத்தச் சோகைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது, அதிகமான உடலுழைப்பு, உணவில் உப்பு, புளி, காரம் அதிகமாக பயன்படுத்துவது, மது அருந்துவது, பகல் தூக்கம், சூடு மிகுந்த உணவு, அதிக அளவு மருந்துகள் சாப்பிடுவது போன்றவை தான்.

இப்படிப்பட்ட உணவு பழக்கங்களால், உடலில் பித்தம் சீற்றமடைந்து ரத்தம் பாதிக்கப்படும். இதனால் ரத்தத்தின் அளவு குறைந்தும், அதன் தன்மை மாறுவதால் ரத்த சோகை உருவாகும். ரத்தம் நமது உடலுக்கும் உயிருக்கும் முக்கியமான ஆதாரம். ஆதலால் ரத்தம் பாதிக்கப்பட்டால் உடல் பலவீனமாகி, எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து காணப்படுவார்கள்.

இந்த வியாதி, சிறு வயதினருக்கு வரும் போது அவர்கள் மற்ற குழந்தைகள் போல விளையாட முடியாது. சிறிது நேரம் விளையாடினால் கூட சோர்ந்து விடுவார்கள். சிறுவயதிலேயே கால்வலி, தலைவலி, பசியின்மை, காய்ச்சல், எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகளை காணலாம்.

பொதுவாக சிறுவர்கள் எப்போதும் தூங்குதல், சுறுசுறுப்பின்மை, மூச்சு வாங்குதல், இதய படபடப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை பாதிப்பு இருக்கலாம். எனவே முறையாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பது அவசியம்.

முக்கியமாக அவர்களின் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். புளிப்பு, காரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம்.anemic attack more women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button